கண்டதும் கண்கள் கலந்திட
தூரங்கள் தொலைந்தது
மனதினுள் மனம் கரைந்திட
உன்னுள் உறைந்திட்ட நொடிகளில்
உயிரோடு தொலைகிறேன்
மீளா நினைவுகள் தேடி
மீண்டும் பயணிக்கிறேன்
நிழலாய் விலகாமல்
நீ வேண்டும்..-
எல்லாம்
காதல் மலர்வதில்லை..
காமமற்ற நட்பும்
கை கோர்க்கும்..
காணும் இதயங்களில்
நேர்மறை எண்ணங்கள்
தோன்றினால்..
கலந்திடும் கண்களில்
களங்கமில்லை..
ஊனமாகி போன
உள்ளங்களின்
காட்சிப் பிழையே..-
யாசிப்பது ஒன்றே ஒன்று தான்
கனவே கலையாதே
கண்ணீரில் கரைக்காதே
கற்பனையிலாவது
இதயம் கலந்து
இணைந்திருப்போம்
இறுதி வரை..-
என் தனிமையை
களவாடியவனும் நீ தான்..
என் மௌனத்தில்
உரையாடியவனும் நீ தான்..
என்னுள் உறைந்து என்னை
உறைய வைப்பவனும் நீ தான்..
என் உதிரத்தில் அணுவாய்..
சுவாசத்தில் காற்றாய்..
என்னுள் கலந்தவனும் நீ தான்..
நீ என்பதில் நானாகி
போனவனும் நீ தான்..-
மனதை வசப்படுத்தும்-என்
நிலா நண்பனையும்..
கண் சிமிட்டி கதை பேசும்
நட்சத்திர தோழிகளையும்..
ஓடி ஒளிய செய்து..
என்னை சுமந்து தாலாட்டும்
வெண்பஞ்சு மேகம் விரட்டி..
வெறுமை கொண்ட
சுட்டெரிக்கும் வானமே..
நீ என் வசப்பட வேண்டாம்..-
வறண்டு போன இதயம்
புதைந்து சிதையமல்
உன்
நினைவலையின்
ஈரத்தில்
உயிர்த்திருக்கிறது..-
சிதறாத சிந்தையோடு
விரித்திடு சிறகை
இலக்குகள் தூரமில்லை
எட்டி விடு எளிதாய்
எண்ணத்தில்
திண்ணமிருந்தால்
பிரபஞ்சத்தையும்
புரட்டி விடலாம்..-
கானல் நீராய்
கலைந்து போனாலும்
உதிர்த்துச் சென்ற
நினைவு பூக்களை
எழுத்துக்ககளில் கோர்த்து
கவிதைச் சரங்களாய்
தொடுத்து வைக்கிறேன்
மணமற்ற காகித பூவாய்
வாடாமல் வதைக்கிறது
வறண்டு போன மனதினுள்..-
நீ என்பது நானாகி போன பின்
தனித்து உன்னை தேடுவானேன்
கண்ணாடி பிம்பமதில்
கண்ணின் கரு விழியினுள்
நீயே நீயே..!
இடைவிடாது உன் பெயரை
இசைத்திடும் இதய ஒலியில்
நீயே நீயே..!
கண்மூடி கனவிலும்
காதலாய் கதைப்பதும்
நீயே நீயே..!
திரும்பும் திசையெங்கும்
திவ்யமாய் நின் உருவமே
தினமும் உன்னை காண்கிறேன்
என்னுள் உலவிடும் உயிராய்..!-
நீ என்பது நானாகி போன பின்
தனித்து உன்னை தேடுவானேன்
கண்ணாடி பிம்பமதில்
கண்ணின் கரு விழியினுள்
நீயே நீயே..!
இடைவிடாது உன் பெயரை
இசைத்திடும் இதய ஒலியில்
நீயே நீயே..!
கண்மூடி கனவிலும்
காதலாய் கதைப்பதும்
நீயே நீயே..!
திரும்பும் திசையெங்கும்
திவ்யமாய் நின் உருவமே
தினமும் உன்னை காண்கிறேன்
என்னுள் உலவிடும் உயிராய்..!-