நெற்பயிரில்
பல ரகங்கள் இருந்தது
என்பது போய்
"நெல்" எனும்
ஒரு பயிர் இருந்தது
எனச் சொல்லும் காலம்
வெகு தொலைவில் இல்லை !!
-
26 JUL 2019 AT 17:35
9 JAN 2020 AT 19:35
விளைந்த நெற்கதிர்களின் மேலே
இரவோடு இரவாக முத்துக்களை
அள்ளி வீசியது யாரோ.......-
30 AUG AT 14:32
நாற்றங்காலில்,
விதைத்து...
பிடுங்கியெடுத்த,
நாற்றை...
வயலில்
நடவு செய்தால்தான்,
அதன் பெயர்...
நெற்கதிராகிறது..!
-இராதாஇராகவன்.
-
29 JAN 2022 AT 4:51
விவசாயியின் வயிற்றை
நிரப்ப ஒவ்வொரு முறையும்
கர்ப்பம் தரிக்கிறது நெற்கதிர்!!!! — % &-
23 DEC 2019 AT 10:58
உணவூட்டுபவனை
உதானசினமாக்கும்
உலகின் ஊனத்தை
உமிழ்ந்து
தலைகுனிகிறாயோ !!
அல்ல..
அள்ளி அள்ளி
படியளந்த
பாமரனின்
பாதம் தொழுகிறாயோ !!
குனிந்தது போதுமடி
நெற்றி நிமிரடி
"நெற்கதிரே"
நேர் கொண்ட பார்வையாலே..!!-