என்
பயனுள்ள நேரங்களில்
சில
உன்னால்
பருகப்பட்டாலும்
எனது
கசப்பான தருணங்களில்
பல
உன்னால் தான்
சூடாய்
செரிமானம் கொள்ளப்படுகின்றன...!
"தீ(டீ)ராக் காதல்"...-
நீ
"இருக்கையில்"
எனக்கென்ன
என்றிருக்கையில்
நடந்து தான் சென்றாய்
கடந்து செல்வாய்
என
நினைக்கவில்லை....
இருப்பினும்
இரு(க்)கைகளில்
மீள் வாய்
மீட்பாய்....
என்ற
நசுக்கப்பட்ட நம்பிக்கையின்
ஓரத்தில்
இன்னும் நான்....-
உனது வைராக்கியத்தை
சிதைக்கும் அளவிற்கு
எனது அன்பொன்றும்
அவ்வளவு
கூர்மையானவை அல்ல......
ஆனால்
என் மீதான உனது அன்பை
"நினைவுகள்" எனும்
ஊசி முனையால்
அவ்வப்போது
கீறிப் பார்க்கும்
ஆழமானவை என்பேன்....-
இருபக்கங்களுக்கும்
இடையூறாய்
வாசிப்பு....
காத்திருக்க வேண்டும் தானே
"வாசிப்பதிலும்
நேசிப்பதிலும்"..-
'தேறவும், தேயவும்'
சந்திரன் தானே
தேட வேண்டும்
சூரியனை....
ஆதலால்
நீ நீயாகவே இரு....
நான் நானாகவே
இருந்து விட்டுப்போகிறேன்....!-
படரும் நினைவுகளின்
பற்றுக் கம்பிகளாய்
"உறவுகள் "
நீள்வதற்கும் வீழ்வதற்கும்..-
"புறக்கணிக்கப்பட்டவை"
வாசிப்பில்
தவறவிட்ட
பக்கங்கள்
செய்த குற்றம் தான்
என்ன?
ஏன் இந்த ஓர வஞ்சனை?
யார் மீது கோபம் கொள்ளும் அவைகள்....
விழிகளின் மீதா?
வரிகளின் மீதா?......-
மிச்சம் வைக்காவிட்டாலும்
ஓரத்தில்
எச்சம்
வைத்தாவது செல்...
பிறவிப்பயனை
அடைந்து போகட்டும்
கோப்பை யாவது....!-
மிச்சம் வைக்காவிட்டாலும்
ஓரத்தில்
எச்சம்
வைத்தாவது செல்...
பிறவிப்பயனை
அடைந்து போகட்டும்
கோப்பை யாவது....!-