மற்றுமொரு இராத்திரி
கவிதை முழுமையும் கீழே-
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
பிறப்பு - ஜூலை 21
இரத்தவகை – A1 +
இணை... read more
அழுந்த பதித்த பாதச்சுவடுகளை
அலைகள் அரித்துக் கரைக்கிறது
பழைய நரையின் அடியிலின்று
புதிய கிளைகள் துளிர்க்கிறது
மறந்த சிரிப்பின் கொம்பில் நின்று
மலரொன்று பூக்கிறது
எழுதாத வார்த்தைகளுக்கு
ஏங்கி தவிக்கும் பக்கங்களில்
புரியாத கையெழுத்தாய்
புலர்கிறதிந்த பிறந்தநாள்
ஓயாத என் ஏழரைகளே
இனியாவது கொஞ்சம் ஓய்வெடுங்கள்...
இன்றெந்தன் பிறந்தநாள்...-
இருட்டுக்குள் நின்றுகொண்டு
வெளிச்சத்திற்கு ஏங்குகிறது
நிழல்
அதன் மீது
வெளிச்சத்தின் பேரிரக்கம் விழுந்தாலும்
இருளை விட்டு வருவதில்லை
நிழல்
இருளாய் போனது நிழலின் குற்றமா...
இயல்பென படைத்தது
இறைவனின் குற்றமா....
நிழலுக்காக இரக்கம் கொள்வதா
வெளிச்சத்தின் மீது எரிச்சல் கொள்வதா
விசித்திரமான தொழில் தான்
இந்த படைப்பு...-
பெண்னெ கண்டோம்
அவளை பேயென கொண்டோம்...
கவிதை முழுமையும் கீழே-
அன்பு அப்பாவுக்கு
அறுவதாண்டு அகவை தின
வாழ்த்துகள்
கவிதை முழுமையும் கீழே-
நீ ..... நான்.....
இது ஒரு டெஸ்டிமோனியல் கவிதை
என்னை நேசிக்கிற நான் நேசிக்கிற
தோழமைகளுக்கான கவிதை
எண்ணிக்கையின் வரம்பால்
எல்லோரையும் இணைக்க முடியவில்லை
கீழே படிக்கவும்...-