அப்பாவின் அன்பு...
புகுந்த வீட்டுக்குப்போகும்போது உடையும் அம்மாவின் கண்டிப்பு...
திருமணம் நிச்சயிக்கப்பட்டதால்
தேங்காய் தண்ணீரை விட்டுக்கொடுக்கும்
அண்ணனின்
சண்டித்தனம்....
-
read more
அக்னி ஜுவாலையயில்
ஜொலிக்கும் கறியாய்
திறமையை தீட்டு...
கொதிக்கும் பாலின்
தன்மைக்கு ஈடு செய்ய இயலாத
ஆடையைப்போல..
உன் வழி திறக்கும்...
-
காணாமல் போனது
பற்றிய அறிவிப்பில்
முதலிடம் ஏரிகளும்,
குளங்களும்...
தன் இருப்பிடத்தை
காணவில்லை என
முறையிட்டு ...
இன்னும் காண
கிடைக்காமல்
தேடிக்கொண்டீருக்கிறது...
மழைநீர்...-
பசுமையான பழைய
நினைவுகள்...
பள்ளி வாசலில்
அவளுக்கான
காத்திருத்தல்....
ஒற்றை நொடியில்
நகரும் அவளின்
நிஜத்திற்கு...
நிழலாகவேப்போன
அந்தக்காதல்
இன்றும் ஒரு ஓரத்தில்...
வருடங்கள் பல
கடந்தும்
வடுமட்டும் என்னோடு....
-
வலிகளை வரிகளில்
வரமென நினைத்தது
வராமலேப்போன
வசந்தத்தை
வாயில் உரைக்க முடியாத
வன்மத்தை....
-
உழைப்பாளியின்
ஒரு துளி வியர்வையைப்போல
உன் துளி
இயற்கையின் உழைப்பு..
விவசாயியின்
சேமிப்பு....-
என்னுள் இன்னும்
ஒரு சதவிகிதம்
உயிர் உள்ளது....
அதில் நூறு சதவிகித நம்பிக்கை
உள்ளது...
விஸ்வரூப வளர்ச்சி
அடைவேன்..-