நூலகத்தில் சரிந்தே
கிடக்கிறது புத்தகங்கள்
எப்பொழுதும்
வாழ்க்கையின் நிமிர்ந்து
நின்றவர்களின் வரலாறு
-
வாசிப்பின்
போதையை ருசித்து
ரொம்ப நாள் ஆயிற்று
என்று விடியல் வரும் நூலகத்தின் வாசலை திறப்பதற்கு என காத்து கொண்டு இருக்கிறது
மனம்-
எல்லாவற்றிக்கும்
ஊரடங்கு முடிந்து
போன மாயம் என்ன?
படிப்பதற்கு நூலகத்தை
சிறை வைத்த
அநியாயம் தான் என்ன?-
வாசிப்பது நீயெனில்
நூல்களோடு நூலாய்
அமர்ந்திடுவேன் நான்!
நீ என்னை
உச்சரிக்க வேண்டி
நித்தமும் நான்
நச்சரிப்பு செய்வேன்!
உன்னை!
நீ என்னை
வாசிக்க வாசிக்க
உன்னுள்
நான் வாசம் செய்வேன்!
-
உறங்கி கொண்டிருக்கிறார்கள் சிலர்
அந்தக் குட்டி அறையில்
தட்டி எழுப்ப ஆள் இல்லை
தட்டிக் கொடுக்கவும் ஆள் இல்லை
தொட்டணைத்து தூக்கி சுமக்க
எஞ்சி வடிந்து நின்ற சில
ஏழ்குடிக் கசடுகளுக்கு,
திராணி இருந்தும் மார்க்கம் இல்லை
மீறிய படையெடுப்பின் முடிவுரை
"அருகிலே மாநகரம்"
தொலை தூரம் கடந்து விட்ட
அந்த சில ஏழை சிப்பிகள் தவிர
ஏனையோருக்கு அது வீண் விவாதம்
மடிப்புகள் கரைந்து பொடிப் பொடியாய்
துகள்களால் வரவேற்ற கிராம நூலகம்
வெள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது
உயிரற்ற உடலுக்கு
*புத்தகங்கள்*
-
சிந்தனை சிறகை விரிக்க
கற்பனை வானளாவி செல்ல
அமைதிகள் பிறப்பெடுக்க
க(வி)தையிலோ லயித்திட
மெய்மறந்து போகுது
நமக்கான நொடிகள்..❤️-
எந்த புத்தகத்தை
வாசிப்பது என்று நீயும்
உன்னை வாசிப்பது
எப்படி என்று நானும்
குழம்பும் இடம்தான்
நூலகம் !!??!!-
உலகத்தில் இருந்து தனித்து இருக்க
உன்னிடம் வந்தேன்
ஆனால்
உலகமே இங்குதான் இருக்கு என
புரிந்து கொண்டேன்
நூலகம் எனும் வடிவில்-
அகம்
அகமார்க்கம் காணும் இடம்
அகம்பாவம் அகற்றும் இடம்
அகலிடம் புகலிடமான இடம்
அகலுள் போற்றும் இடம்
அகிலமும் நிறைந்த இடம்
அக்களிப்பு பொங்கும் இடம்
அயர்ச்சி நீங்கும் இடம்
அசரீரியாக ஒலிக்கும் இடம்
அஞ்ஞாதம் அறியும் இடம்
அஞ்ஞானம் அகற்றும் இடம்
அடிக்கடி செல்லவேண்டிய இடம்
அடைப்பகத்தை மூடச்செய்யும் இடம்
அண்ணா தவஞ்செய்த இடம்
அதியனாய் மாற்றும் இடம்
அனுபவங்களை பெறும் இடம்
அந்தராத்மாவை உணரும் இடம்
அபிவிருத்தி காணும் இடம்
அமிழ்தைவிடச் சிறந்த இடம்
அமைதி காக்கும் இடம்
அரசியல் பயிலும் இடம்
அலக்கண் நீக்கும் இடம்
அலைமகள் துயிலும் இடம்
அழிகதைக்கு விடைகாணும் இடம்
அறம் வளர்க்கும் இடம்
அறிவுரைகள் கிடைக்கும் இடம்
அறிஞர்களை உருவாக்கும் இடம்
அறிவுச்சுடர் ஏற்றும் இடம்
அற்புதங்கள் நிகழ்த்தும் இடம்
அன்பால் நிறைந்த இடம்
அன்றாடம் செல்லவேண்டிய இடம்...
நூலகம்-
எழுத்துக்களின்
எண்ணங்களின்
சிந்தனைகளின்
கற்பனைகளின்
உருவடிவம்
புத்தகம்!-