தற்காலிக மரணத்தை
தள்ளி வைத்த இரவுகள்...
(Think positive)-
உண்மையில்
நிம்மதியான இரவுகள்
விழித்தபடி காணும்
கனவுகள் அனைத்தும்
என் விருப்ப படி...-
காமத்தின் மோக விருந்தில்
கட்டழகி இடை இடுக்கில்
காமனழகன் கரப் பிடிப்பில்
கட்டிலின் காலிடை உடைந்ததோ
கட்டழகில் யெம்இடை உடைந்ததோ!
உறங்காத இரவில் நீவீசும்
உஷ்ணத்துகள்கள் எம்முகம்
உதிக்கும் நீர்க்குமிழ்களில்
உம்முகம் ஒளிர்கிறதே!
முத்த நெடிச் சாரலில்
மேக மழை பொழிகிறதோ
மேனி நனைகிறதோ யெம்கழுத்து
மேலிடுக்கில் தீண்டும் இன்பமதில்!-
உயிர் சுமக்கும்
நினைவுகளின்
ஓரங்க நாடகங்கள்
அரங்கேறும் தருணங்கள்...-
உன்னிடம் பேசிய நினைவு எச்சங்களை
அசை போட்டுக்கொண்டே
எந்தன் இரவு கழிகின்றது-
தூங்காத இரவுகள்
அனைத்தும்....
வறண்ட
நிலையிலும்
துளிர்கிறது...
இரவு
முழுவதும்...
நினைவுகள்...
- க.கொ.மணிவேல்...🖋-
மனம் தொலைத்தேன்
தூக்கம் தொலைத்தேன்
என்னை தொலைத்தேன்
ஆனால், தொலைத்தவற்றின்
தேடலில் எல்லாம் 'நீ '
மட்டும் இருக்கிறாய்.-
சிணுங்கும் விழிகள்
சிக்கென விழித்தது
உந்தன் நினைவுகளாலே..
விழிமூடா இரவுகளையே
வெகுமதியாய் நிரப்பிவிட்டு
செல்கிறாய் உந்தன்
நினைவுகளாலே..!!
- இளங்கவி ஷாலினி கணேசன்-
விடியல் கொஞ்சம் நீளாதா
என்று எண்ணத் தோன்றுகிறது
ஏன்னா விடியும் போது தான்
சுகமான ஆழ்ந்த உறக்கம்
வரும் பாருங்க அந்த நேரத்தில்
பாழாய்ப்போன அலாரம்
தன்னோட வேலையை
காட்டிடும் 😭...-