"அறிவைத் தந்த மொழி
அழகை ரசிக்க வைத்து
ஆணவத்தை அடிப் பணியச்
செய்த அன்பின் ஆயுதமாம்
எம் தமிழ்மொழி..
நட்புக்குள் வலம் வரும்
எளிமையான மொழி
உயர்வென்ற தாழ்வென்ற
பேதமில்லா பெருமொழி..
ஏட்டிலே கற்க ஏதுவான
பழகுதற்கு இலகுவான மொழி
நான் பற்றுக் கொண்டு
காதலிக்கும் செம்மொழி
தமிழ்மொழி..."-
என் தாய்மொழி தமிழ்...
அவள் மேல் அளவற்ற பாசம்
கொண்டிருந்தாலும்...
அவள் சகோதரிகள் தெலுங்கு,
கன்னடம், மலையாளம் என...
அனைவர் மேலும் பாசம் உண்டு...-
செவி வழி கேளாதோர்
சிந்திக்கும் மொழி...
இதுவரை யாரும்
அறியாதது அவர்
தாய்மொழி....-
கிருஷ்ணதேவராயர் கோட்டையில்,
திறமைக்கு என்றுமே மதிப்புண்டு..
பன்மொழி திறமை கொண்ட ஒருவன்,
தன் திறமை அனைத்தையும் வெளிப்படுத்தி,
அவன் தாய்மொழி கண்டுபிடிக்க
சவால் ஒன்றை அவையில் வைத்தான்....
அரசவை நேரம் முடிந்ததினால்,
அடுத்த நாள் பார்போம் என்று சொன்னான்....
இராயர் மிகவும் குழம்பி நிற்க,
இராமன் சுலபமாய் வழி சொன்னான்...
பன்மொழி புலவன் தூங்கும் நேரம்,
அவன் மேல் ஊர்ந்தது பல் இல்லா பாம்பு....
அலறி புடைத்து எழுந்த புலவன்,
"அய்யோ அம்மா ஆபத்து" என்று,
தன் தாய்மொழி தெலுங்கில் கத்திச் சொன்னான்..
மறுநாள் அரசர் அவன் தாய்மொழி அறிவிக்க,
அதுவே சரியென வணங்கிச் சென்றான்...
எத்தனை மொழிகள் கற்றாலும்
அபத்து என்றதுமே உதவிக்கு வருவது...
அவரவர் தாய்மொழி மட்டுமே....-
வாழ்க்கை பயணத்தில்
மொழிகள் எத்தனை கற்றாலும்
இறுதி வரை சிந்திப்பது
தாய்மொழியில் மட்டுமே....-
தர்மத்தமிழ்
தளராத தமிழ்
தங்கத்தமிழ்
தடுமாறாத தமிழ்
தனித்துவத்தமிழ்
தடம்புரளாத தமிழ்
தலைசிறந்த தமிழ்
தன்னலமில்லாத தமிழ்
தரணியெங்கும் தமிழ்
தழைத்தோங்கும் தமிழ்-
கருவறைத் தாண்டி காற்றை சுவாசித்த நாள்முதல்
கல்லறைக்குள் என்னுடல் புதைக்கும் வரை
எனதுயிர் தமிழை தழுவிக்கொண்டிருப்பேன்...
அன்பின் அடையாளம் எம் தமிழ் மொழி...
ஆதியிலே தோன்றியதாம் அம்மொழி...
இலக்கிய மரபே அதன் இன்ப மொழி..
ஈருடலாக பிளந்தாலும் என்னுள் கிடக்கும்
உதிரம் உருண்டோடினாலும்
ஊடுதிகொம்பால் பரவி வரும் இசைத்தமிழ் மொழி...
எனக்குள் என்னையே தொலைத்தாளும் மொழி..
ஏக சிந்தையிலும்
ஐங்கோல் ஆட்சி செலுத்துமே தாய்மொழி..
ஒற்றையாழித்தேராம் உலகெலாம்...
ஓரடிக்கோரடி ஓராட்டுமாம் தனிமொழி...
ஔபரிதிகம் இணையில்லா என் தாய் தமிழ்மொழி...
-