கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..
வெள்ளத்தாற் போகாது
வெந்தழலால் வேகாது..
வேந்தராலும் கொள்ளத்தான்
முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது...
கள்ளர்க்கோ மிகவரிது
காவலோ மிகவெளிது
கல்வியெனும் உள்ளத்தே
பொருளிருக்க வுலகெல்லாம்
பொருள்தேடி யுழல்வதேனோ....
பிடித்தப் பாடல் சமர்ப்பணம் ...
உமக்கு...🙏🙏🙏🙏
-
ஓர் அழிகின்ற சமுதாயத்தில், அத்துடன் சேர்ந்தழியாமல், நாளை வருகின்ற சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருசிலர் தனிமனிதர்களாகவே நிற்பர்.
சிறந்த தனிமனிதர்கள் உருவாக வாய்ப்பற்ற சமுதாயம் சிறந்த சமுதாயம் ஆகாது. செக்குமாடுகளை உற்பத்தி செய்கிற சமுதாயம், தேங்கி அழியும்.
-
இன்பம் என்றால்
என்னவென்றே பலருக்கு
தெரியாதது.
அது பொன்னால் புகழால்
கிடைப்பதல்ல.
தன்னைஅறிதலில்
ஒரு இன்பம் இருக்கிறது
பாருங்கள்
அந்த இன்பமே உயர்வானது
_ஜெயகாந்தன்-
நோக்கம் தெளிவானதாக
இருந்தால் வெற்றி நிச்சயம்,
என்னருமை தோழர் ஜெயகாந்தன்,
அவரது நோக்கம் சில்லறை விஷயங்களில்
ஒருபோதும் இருந்ததில்லை,
அவரது நோக்கம் தெளிவானதாக இருந்தது,
வென்றுவிட்டார், காலத்தை கடந்து நிற்கிறார்..!
தன் கதைகளினூடே மனிதத்தை விதைத்திருப்பார்,
ஒவ்வொரு வாசகரிடமும் பேரன்பை ஊற்றெடுக்கச் செய்யும் வலிமை அவரது வார்த்தைகளில் உண்டு..!
ஒவ்வொரு கதைகளை வாசித்த பின்னரும் பரவசம் வந்து தொற்றிக்கொள்ளும்..!
நான் சரியாகத்தான் இருக்கிறேனா என்பதைக்கூட அவரது கதைகளின் வாயிலாக
பரிசோதித்துக் கொள்கிறேன்..!
பேரன்பு தான் அவரது சொற்கள்,
மனிதம் தான் அவரது கருத்து,
ஒவ்வொரு கதைகளின் வாயிலாகவும் என்னைத் தட்டிக் கொடுப்பதாக உணர்கிறேன்,
என்னோடு பயணிப்பதாக உணர்கிறேன்..!
என்னருமைத் தோழர் ஜெயகாந்தன்,
எனது வாழ்வின் வழிகாட்டி..!-
சிறுவயது பையனுக்கும்
அறம் தானாக வரவேண்டி
வைத்த கதை
அக்ரகாரத்துப் பூனை
ஜெயக்காந்தன்-
ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டே இருக்கிறதை விட, அறிவு-உணர்வு பூர்வமான சம்பாசனைக் கலப்பைவிட என்ன இன்பப் பரிவர்த்தனை இருக்கு உலகத்திலே!
-
கேட்டு அதிகம்
பாதிக்கப்பட்ட
சமீபத்திய
கதை
ஜெயகாந்தனின்
எங்கோ ... யாரோ..... யாருக்காகவோ
அதிகம் கண்டிராத பெண்மையின்
மறு பக்க வாழ்வு.-
சில நேரங்களில் சில மனிதர்கள்
பெண்மையைப் பற்றிய
மிகச்சிறந்த படைப்பாய்
நான் இன்று வரை
நம்புவது இந்தப் படத்தைதான்.
இயக்கியதும் எழுதியதும்
ஆண் என்பதில் தான்
இதன் மற்றொரு சாராம்சம்-
நான் தொட்டாற்சுருங்கி அல்ல,
எனினும் என்னை யாருக்கும் தொட துணிச்சல் கிடையாது,
அப்படியும் மீறித் தொட்டால் நான் தூர விலகிப் போய்விடுவேன்.
-ஜெயகாந்தன்-