நம் நினைவில் ஆடும்
பேசத் தவித்தவை
வளர்ந்து கொண்டே இருக்கும்
மௌனம் மட்டும்
ஒலிக்கட்டும்
விலகியே இரு
எட்ட நின்று பார்க்கையில்
உன் அத்தனை அழகும்
தெரிகிறது
-
இன்று ஒரு இரவு
நேற்றைய நட்சத்திரங்கள்
சற்று இடம் நகர்ந்துள்ளது
நேற்றைய நிலவை விட
இன்றைய நிலவு தேய்ந்திருகிறது
நானும் தான் நேற்றைவிட
இன்று இன்னும் கொஞ்சம் சோர்ந்திருக்கிறேன்
ஆதலால் அன்பே
முந்தைய நிலவை விட
ஒளி கூட்டுமொரு
புத்தம் புதிய இரவில்
காணாமல் போகிற
விண்மீன்களை கண்டுபிடிக்கலாம்
கைநிறைய உற்சாகம் கொண்டுவா-
உன் மௌனத்தின் பொறுமையில்
விதையாகிறேன்
உன் சொற்களின் கருணையில்
செடியாகிறேன்
உன் பார்வையின் வெளிச்சத்தில்
விருட்சமாகிறேன்
உன் இருப்பே போதும்
நெகிழ்ந்து நிறைகிறேன்-
முகத்தை நகலெடுத்து அனுப்பி விடுகிறாய்
என் தொடுதலுக்கு எப்படி சிலிர்ப்பாய்-
பாட்டி வடை சுடுகிறார்
காகம் கரைவது கண்டு
ஒரு வடை தருகிறார்
காகம் வடை உண்பதை நரி காண்கிறது
நரியை கண்ட பாட்டி
நரிக்கு ஒரு வடை தருகிறார்
மூவரும் மகிழ்ந்து வடை உண்டார்கள்
திருட்டும் ஏமாற்றுதலும்
இல்லாத எளிய கதை
கனியிருப்ப காய் கவர்ந்தற்று
என் பிள்ளைகளுக்கு
எப்போதும் கனிகளுடன் நான்
அனுதவமணி
#12.06.2023-
What do you think about power
Is it to hurt someone physically or Emotionally?
Is it having plenty of money?
Is it having bunch of people around ?
Is it being immortal?
Absolute No!
Being powerful is
unbreakable by external force.
Which means nothing
can break your Inner peace
unless
you choose to break!
-
உன் ஈர முத்தங்கள் காயும் முன்,
பிரிவின் கண்ணீரை தந்து செல்கிறாய்..!-
நம் வன்மம் முழுவதையும்
தின்று இல்லாமல் போகும்
அந்த ஒருவர்,
இழப்பின் வலியை
வன்மத்தின் வடும்பை மட்டும்
தந்துவிட்டு போகிறார்!
சில சமயங்களில் அழுதும்,
பல சமயங்களில் அங்கலாய்த்தும்,
கரைத்துக் கொள்ள முடிகிறபடிக்கு
அத்தனை எளிதானதல்ல
குற்றவுணர்வு!-
காய்ந்து உதிர்ந்த இலைகளுக்காக
காத்திருக்கும் நெருப்பு நான்
அழிந்து போவது பற்றிய
வருத்தத்தை விடுங்கள்
உங்களை அணைத்துக்கொள்ள
காத்திருக்கிறேன்
உங்களின் பசுமையை
மீட்டுத்தர முடியாத நான்
எனக்குள் கரைத்துக்கொள்ள
காத்திருக்கிறேன்
அழிந்து போவது பற்றிய
வருத்தத்தை விடுங்கள்
உங்களோடு சேர்ந்து
அழிந்து போக
நானும் தயாராய் இருக்கிறேன்
-
Krishna!
I don't know
Whether he was a god or not,
But he was a child,
Received so much love from all,
Especially from his Mother,
In this Krishna jeyanthi,
I promise to love and cherish
Like Yasodha!
May Children evolve with
Love around them!
-