தாயை இழந்து வாழ முடியும்
தாய் நாட்டை இழந்து வாழ முடியுமா.
நம்மை தாய் சுமப்பது
பத்து திங்கள் வரை
தாய் நாடு நம்மை சுமப்பது
ஆறு அடி பள்ளம் வரை-
தொன்தமிழும் மனிதனும் தோன்றிய
பெருமைக் கொண்டாய்
மாஅசுர மலைகளை காவலனாய் கொண்டாய்
விரிவாக ஆண்ட அரசர்கள் முதல்
தமிழ் அகவையில் இருந்த புலவர்கள்
எண்ணம் வரை அதிகமாக கொண்டாய்
ஏழுகண்டத்திலேயே முக்கடலும் சங்கமிக்க
காரணமாய் இருந்தாய்
கொழு செல்வமிக்க
இயற்கை வளங்களையும் கொடுத்தாய்
இன்றும் கம்பீரமாய் நி்ற்கும்
உன்னை பெருமைப்படுத்தாமல் இருப்பேனோ.....
-
அந்த விடுமுறை நாளில்..
முழு நிலவும் விடுப்பிலிருந்த வேளையில்..
கடும் வெயிலில்..
சுடும் மணலில்..
கால்களும் காதுகளும் எனை
நிந்திக்க ஏன் நின்றேன்?!
நிலம் தழுவி நித்தமும்
கடல் கத்துகிறதாம்..
காணாக் குமரி கண்டத்தைக்
கரை ஏற்றத் தானோ?!
இத்தனை இரைச்சலில்
பாறை தேடி அமர்ந்தோர்க்கு
எப்படி கிட்டியிருக்கும் அமைதி?!
நேரிய எழுதுகோல் பற்றியும்
வளைந்து நிற்பதேன்
வள்ளுவர் சிலை?!
பனை நிழலில் அமர்ந்து
பகர.. வினவ.. ஆயிரம்!
பிடியில் இருந்ததோ
கைப்பேசி மட்டும்.. - அது
விக்கி விழுங்கிய ஒன்றை இங்கே
விடுவித்து விட்ட நிறைவில்..
தமிழினி_சுபா
#பேசுபடம்-
உயர்ந்து நிற்கும் வள்ளுவன் சிலையும்
வானை முட்டும் தொட்டில் பாலமும்
முக்கடல் அலைக்கும் கரையும்
கட்டுமர மீனவனும்
நாணமும் வீரமும் நிறைந்த பெண்கள் ஜிவிக்கின்ற
குமரியில் பிறந்த கருவாச்சி நான் !-
ஆழிக் கடலில் அகப்பட்ட குமரிக்கண்டம்
ஆதி பகவன்
ஆதி மனிதனாக முதலில்
ஆக்கிய தமிழர்
ஆண்டாண்டு காலமாக
ஆண்டு நவநாகரீகமான
ஆதி தமிழினின் முதற் சங்கமும்
ஆகத் தொடர்ந்த இடைச்சங்கமும்
ஆரம்பித்து தமிழ் வளர்த்து
ஆண்டுவந்த குமரிக் கண்டம்
ஆழ்கடலில் அமிழ்ந்து அமைதியாக
ஆழ்ந்து உறங்குதே அந்த
ஆழிப்பேரலையால்
ஆட்கொள்ளப்பட்டு
ஆண்டுகள் பல
ஆயிரம் ஆன பின்பும்
ஆழ்கடல்தெய்வத்தின் மடியில்.
ஆத்தா கருணைக் கடலல்லவோ
ஆட்கொண்ட கோபம் தனிந்து
ஆத்தா நீ எம்மூதாதையர்
ஆதித்தமிழர் அறிந்தோ அறியாமலோ
ஆற்றிய பிழையை மன்னித்து
ஆக என் தொப்புள்கொடி உறவுகள்
ஆண்ட இடம் அத்தனையும்
ஆட்கொண்ட இடம் அத்தனையும்
ஆத்தா மனமிறங்கி தா
ஆயிரம் பிழைகள் நாங்களிழைத்தாலும்
ஆழிக் கருணாம்பிகையே
ஆழ்கடற்தாயே உன் பிள்ளைகள் நாங்கள்
ஆக உன் பாதம் பற்றி வேண்டுகிறோம்
ஆட்கொண்டவற்றைத் தா!
ஆடியோடி ஆதிகடைசியில்
ஆறுகள் சங்கமம் ஆவது
ஆழிக் கடலிலே
ஆடியோடி நாங்களும்
ஆகக் கடைசியில்
ஆத்தா உன்னையே சரணடைந்தோம்
ஆட்கொண்ட ஆதித்தமிழர் இடங்களை
ஆகத் திரும்பத் தா!
✍️✍️✍️அருண் குமார் வேலுசாமி.-