தோகையாகிய நின் இமைகளை
மூடி தூங்குகையில்
பசு தன் கன்றை நாக்கை கொண்டு தத்தல் செய்தாற் போல்
உன்னையும் நான் முத்தமிட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது-
கட்டிலின் மேல் கிடக்கும் உன் ஆடையை நித்திரை கொள்ள அகற்றவும் தோன்றவில்லை,
நீ அருகில் இல்லாத குறையை உன் நறுநாற்றம் தீர்த்துவைக்க...-
ஒருமுறை சிறு மலர் தெரசா சொன்னார் , விண்ணுலகிலிருந்து
மலர்களை தூவி ஆசி வழங்குவேனென..
ஒருவேளை என் மீது மலர் இன்னும் தூவவில்லையோ...
தாய்மை வரம் கிடைக்க..-
கூடல் முடிந்து
முண்டு எடுத்து வரிந்து கட்டிக் கொண்டிருக்கும்
அவன் மேல் சாய்ந்து கொண்டு
அவன் காதில் பெரும் மூச்சை
இழுத்து விட்டு
தன் களவாடும் கண்களில்
என்னை மணந்து கொள்வாயா என்ற கேள்வியும் எழுவதும்
காதலின் ஒரு அங்கம் தானே-
ஒவ்வொரு திங்கள் ஆரம்பத்திலிருந்து
இறுதிவரை குறித்து நாள்காட்டிக்கும்
சலித்து விட்டது போல..
இனி திருப்ப பக்கங்கள் இல்லை என்றதால்...-
சலிப்புற்று விட்டத்தை பார்த்து
படுக்கையில்
கண்களில் புதிதல்லாத
நினைவுகளில்
அவனது நகைப்பும்
தளர்ந்த கண்களும்
அன்பில் ஏங்கித் துடித்த
இதயத்தையும்
அதற்காக எனை உதறிச் சென்ற
கைகளும்
ஏனென்று தெரியாமல் பிரிந்தும்
இரு மனங்களும் வெவ்வேறு
திசைகளில் சென்றிருந்தும்
எத்தனையோ நாழிகை
கழிந்திருந்தாலும்
கண்களில் வந்து பார் என்னை
என்கிறது அவனது பழைய
புகைப்படம்
-
எத்தனை முறை பார்த்தாலும்
மீண்டும் பார்த்து
ரசித்து விட்டு போ என
வியக்க வைக்கிறது இயற்கை
-
படுக்கை அறையில்
கூடலுடன் செல்லாமல்
வாதத்துடன் சென்று
அவன் ஒருபுறமும்
அவள் மறுபுறமும் படுக்க
இன்றைத்தினம் இவள் இதை தீர்ப்பாளோ
எந்த துக்கச்சோர்வுடன் கண்களை
அடைத்து அடைத்து திறக்க
மாட்டிகொண்டானே வசமாக அவளிடம்...😍
-
நின் போதை கொணரும் அன்பில்
தள்ளாடி நிற்கிறேன் நித்தமும் வேண்டுமென !
-