-
எவளோ ஒருத்தி
எங்கோ ஓர் மூலையில்
என்னைப் போல தானே...
துடித்துக் கொண்டிருப்பாள்!!!
உன்னைப் போலொருவனின்
நம்பிக்கைத் துரோகத்தால்....-
எரிக்கத்தான் நினைக்கிறேன்...
எப்படி எரிப்பது???
அவன் தந்துவிட்ட
துயரங்களையும் ....
விட்டுச் சென்ற
துரோகங்களையும்...-
அடடா !!!
என்ன விந்தை இது...
முதலில்
அழைக்கிறது
அழகாக்குகிறது
பிறகு
அடிக்கிறது
அழவைக்கிறது
அணைக்கிறது
இறுதியில்
அணைத்தும்விடுகிறது..
காதல் ஒரு கர்மா !-
நிலுவையில்
வைக்கப்படும்
பாவங்கள்....
நிச்சயம்
ஒருநாள்
சிலுவையில்
ஏற்றப்படும்!-
பிறர் கூட்டை..
கலைத்தவர்க்கெல்லாம்..
கூடே இல்லாமல் செய்து,
தன் இருத்தலை..
உறுதி செய்கிறது..
கர்மா.....-
கர்மா
சில கர்மாவை கழிக்கலாம்...
சில இடத்தை விட்டு வெளியேறுவது
சில மனிதர்களை விட்டு விலகுவது ,
சில காரியங்களை செய்யாமல் இருப்பது.
பிற உயிர்களை வதைத்து உண்ணாமல் இருப்பது,
சில வேளைகளில் கோபம் கொள்ளாமல் இருப்பது...-
கர்மாவின் தேடல், புரிந்து கொண்டேன், வாழ்வில் தனிமை தொற்றிக் கொண்டது, தடம் அழிகின்ற பூமியில் தடம் பதித்தேன் , இல்லறமும், இல்சுகமும் துரத்துவதும் இங்குண்டு, இனி ஒரு தனியுகம் தேவையில்லை..
-
பிறர் வாழ்வில் பொழுதுபோக்காக ..
நீங்கள் சிறுதுன்பம் தரும்போது ..
உங்கள் வாழ்வில் ..பேரழிவுகள் ..
விளையாட்டாய் நடக்கும் ..
கொடுக்கும் போது சிரித்த உள்ளம் .
பெறும் போது அழக்கூடாது ..-