முத்தமிழின்
மூன்று 'லழள'கரம்..
கரம் சேரும்
உன்னதம்
"தொழிலாளர்"-
உழைத்து வாழ வருபவரை
வாழ வைக்கும் சென்னை...
அனைவரையும்
ஆதரிக்கும் சென்னை...-
இருள் சூழ்ந்த இரவுகளில்..!
என் புத்தகமும் நானும்..
விழித்திருக்க..!
மனம்தனில் மிளிர்கின்றது..!
தன்னம்பிக்கை எனும்..
அகல் விளக்கு..!-
உழைக்கும் வர்க்கத்தின் சாயல்
குத்தும் குளிரிலும்
நடுநாசியிலும்
உழைப்பை உதாசீனப்படுத்தும்
இவ்வுலகில்
இவரும் ஒருவர்
இவையெல்லாம் படைத்தவர்
ஒரே கடவுளாம்
நம்புங்கள்......
// அவரும் கடவுளும்//-
மின்னல் வெட்டாக
கருகிய அவர்களின்
உள்ளங்கைகளின்
ஆயுள் ரேகையில் மட்டும்
ஏனோ அவசர அவசரமாக
உழைத்து ஊறலெடுத்தே
கனத்து கன்றிய வாசம் நுகர்கிறேன்...!!!
-
புருவத்தை
சீராக்கி
வண்ணம்
சுமக்கும்
கண்களை விட
உழைத்து
கருவளையம் சுமக்கும்
கண்களே
விலைமதிப்பில்லாதது-
தன்னை மறைத்து கொண்டு
பூக்களை தாங்கி நிற்கும்
நாரின் உழைப்பை உலகம்
அறியாது இருப்பினும்...
அதன் உழைப்பில் உதிராது
இருக்கும் பூக்கள் அறிந்திருப்பது
அவசியமே...!-
இன்பம் வரும் போதும்
துன்பம் வரும் போதும்
நம்முடன் இருக்கும்
ஒரே நண்பன்
" உழைப்பு "
மட்டும்தான்-