அதை வழிநடத்த
கொடுத்தான் மதி
அதை மறந்து
புலம்ப வைத்தது விதி
அதனால் இழந்தான்
மனிதன் நிம்மதி...-
சொல்லாமல்
துயர் உணர்ந்து
துடைக்க முன்னேறும்
கரம் கொண்டவர்
அனைவரும் இறைவனே...-
ஒரு விதையினுள் ஓராயிரம்
விருட்சத்தை வைத்தவன்
இறைவன்.!
ஓராயிரம் அணுக்களில் ஒரு
அணுவில் ஒரு உன்னத படைப்பை
வைத்தவன் இறைவன்.!
நாம் உறங்கும் போது
அவன் உறங்காமல் நம்மை உயிர்ப்போடு
வைத்திருப்பவன் இறைவன்.!
மழலையின் புன்னகையிலும்
மெளனப் புன்னகையிலும்
நிறைந்திருப்பவன் இறைவன்.!
நம்பிக்கையின் அரசனாக
வீற்றிருப்பவன் இறைவன்.!
அன்பே சிவம்.!
அன்பில்லையேல் சவம்.!-
அந்த சந்தோஷம் மிகவும்
கொடுமையானது !
சோகம்,கடினம்,கவலை,
துக்கம் மிகும் நேரத்தில்,
அதை சற்றும்
அனுபவிக்கமுடியா வண்ணம்
இறைவன் தரும்
அந்த சந்தோஷம்
மிகவும் கொடுமையானது !
ஏனெனில் இருக்கும் சூழ்நிலையில்
எத்துனை முயற்சித்தாலும்
அந்த சந்தோஷத்தை
அனுபவிக்க முடிவதில்லை !
-
இறப்பே இல்லாதவன் இறைவன்.
கல்லுக்குள் மறைந்திருக்கும்
நெருப்பு போல, நமக்குள்
அமிழ்ந்திருப்பவன் இறைவன்.
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே
அமர்ந்து தன்னை வெளிபடுத்தி
கொள்பவன் இறைவன்.!
ஒரு செல் உயிரியிலிருந்து
ஆறறிவு மனிதன் வரையும்,
இப்பிரபஞ்ச முழுவதிலும் பரந்து
விரிந்து எங்கும் நிறைந்து
இருப்பவன் இறைவன்.!
அனைத்திலும் ஊடுருவி இருக்கும்
இறைவனை உணர தெளிவான
மனதால் மட்டும் முடியும்.!
இறுதியாக இன்பத்தையும்,
துன்பத்தையும் கடந்து புன்னகை
செய்யும் மழலை உள்ளத்தில்
மகிழ்வாக இருக்கிறான் இறைவன்.!-
ஏமாற்றிப் பிழைப்பவருக்கே
அனைத்தும் கிடைக்குமென்பது
விதி செய்த சதியா? அல்ல
இறைவன் செய்த பிழையா?-
தர்மமே வரவு வைக்கப்படும்
என்று நினைத்து இருக்க
இன்று அதர்மமெல்லாம்
தான் வரவு வைக்கபடுகிறது-
அதனால் தான் அவன்
நமக்குள் ஒளிந்து கொண்டு
நம்மை ஆட்டுவித்து
கொண்டிருக்கிறான்.!!
சில சமயம்
தன்னை வெளிப்படுத்த
நம்மை சோதனை செய்கிறான்
பல சமயம் அவனை
மறைத்துக்கொள்ள ஆசையை
தூண்டியும் விடுகிறான்.!!!-