மதுவென மயக்கும்
உன் சிரிப்போசை.....
மரணப் படுக்கையில்
நான் இருப்பினும்
என்னை மீட்டெடுக்கும்
விசை....-
போதை நாடி செல்லா
என் மனம்,
இது தான் பாதை என
புத்தகங்களை கையில் எடுக்க சொன்னது,
என் மன வலி ம(றை)றக்க....-
இருவேறு நிலையில்
இருவிதமான வாழ்க்கை
இருமுகம் கொண்டு
இருந்து மாளவில்லை!
இருப்பதுவே வாழ்க்கையா?
இருந்திட இது போதுமா?
இருப்பதை விட்டுவிட்டுபறந்திட ஆசையா?
இருத்தி வைக்கமுடியாமல் மனம்
இருபொருள் கவிதையில்
இருபொருள் தேடி அலைகிறதே
இருபொருள் என்ன? எப்பொருள் நோக்கினும்
இருப்பவன் உணர மறுக்கிறதே
-
மறந்துவிட்டார்களா 😳?
இல்லை மறைத்துவிட்டார்களா ?
இல்லை மழுங்கிவிட்டார்களா ?
இல்லை தொலைத்துவிட்டார்களா ?
அந்த நான்குணத்தையும்
இந்த இருவர்க்கமும் !-
வார்த்தைகளே சரியாக புரிந்து கொள்ள
முடியாத இடத்தில்...
மௌனத்திற்கு என்ன வேலை !!-
நம்முடைய தனித்தன்மையை
யாருக்காகவும்
எந்த சூழ்நிலையிலும்
இழக்க கூடாது.-
பிறருக்காக வாழும்
உன் வாழ்க்கை
இயந்திரம் போன்றது.
உனக்காக வாழும்
வாழ்க்கை
பறவைகள் போன்றது.-
வார்த்தைகள் தேவையில்லை,
மௌனம் ஆயிரம் கதை சொல்லும்,
காலம் மாறினும் ஆழமான உணர்வுகள்
அழிக்கப்பட்டிருக்காது,
தேடுதல் கிடைக்க சேர்க்கப்பட்ட உறவு
அரிக்கப்பட்டு போயிருக்காது,
இருவேறு பாதைகள் சந்திக்கும்
முனைகள் இணைந்து தனி வேறுபாதைகள் என மாறி இருக்காது.
இன்று உரசல்கள் அற்ற பயணங்கள்
தொடங்கி இருக்காது.
-
சிறிய தட்டுமாறல்கள்
தடுக்கி விழுதலில்
உணரப்படும் அந்த நிமிட வலிகள்,
மிகப்பெரிய பள்ளத்தில் வீழும்
வீழ்ச்சி போது உணரப்படும் வலி
காலத்தின் ஓட்டத்தில்
ஏற்பட்ட வலிகளை மழுங்கடிக்கும்.
இரு கோடுகள் தத்துவம்
வாழ்க்கையின் பால பாடம்.
-