Faraway land with prosperity is yet to be discovered,
New horizon is waiting for your dear vicinity,
A peak and a valley are of the same milestones for you to treadpast,
Look not at the pathway you crossed,
Exhaust not your energy on overviewing the past,
Daily new sun is arising for you to glitter and energize.-
Faraway land with prosperity is yet to be discovered,
New horizon is waiting for your dear vicinity,
A peak and a valley are of the same milestones for you to treadpast,
Look not at the pathway you crossed,
Exhaust not your energy on overviewing the past,
Daily new sun is arising for you to glitter and energize.-
மனமும் உடலும் ஆர்ப்பரிக்கா நிலையை அடைந்திட வேண்டும்,
நினைவிலும் நிஜத்திலும் குளுமை வேண்டும்,
நல்லன மட்டுமே நினைவில் வேண்டும்,
நட்பென என் மனம் மாறி என்னுடன் அமர்ந்து கலந்திட வேண்டும்,
உண்மை சக்தியெல்லாம் திரண்டு என்னுடன் சேர்திட வேண்டும்.
சாந்தமே நான் என மாறி
அமைந்திட வேண்டும்.
-
It gives me a lesson to know their character.
It teaches me to analyze the situation
Of them
It gives me greater lesson to handle the situation as calm and smooth as possible.
It strengthen my memory to embed it forever and ever-
ஏகாந்தம் இனிமை ஆகிறது,
உணர்வுகள் உறங்கி விடுகிறது,
மனம் இலகுவென மேலே மிக உயர பறக்கிறது
எண்ணங்கள் அற்ற ஆழ்நிலை தியானம் கைவசம் ஆகிறது.
மனம் தெளிய, அறிவு கூர்தீட்டப்படுகிறது.
உடல் வலுப்பெற்று இன்னல்கள்
ஆயிரம் தாண்ட உற்சாகம் பிறக்கின்றது.
நினைவுகளே நீர்க்குமிழி போல்
வெடித்து காற்றில் கரையக் கடவாய்.
-
பட்டாம்பூச்சி நான் படபடன்னு பறந்திடுவேன்,
சிட்டாக விரையும் சில் வண்டென
சிரித்திடுவேன்,
கண்ணான கட்டித் தங்கம் குதித்து குதித்து ஓடுது,
வண்ண வண்ண உடல் கொண்ட நான் இங்கு அழகா,
குதித்து கும்மாளம் போடும் குழவி
இங்கு அழகா,
சிரிப்பால் உலகு குழவியினால் நிறைந்திடவே,
கைகோர்த்து நானும் அழகால்
நிறைத்திடுவேன்-
வயது ஏறுவதில்லை,
முதுமை துரத்துவதில்லை,
துன்பம் தலைக்கேறுவதில்லை,
கடந்தவை நம்மை பயமுறுத்துவதில்லை,
வருபவை நம்மை யோசிக்க வைப்பதில்லை,
சிரிப்பதற்கு மட்டுமே கண்கள்,
கண்ணீர் விழுவதற்கில்லை,
கைகள் அணைப்பதற்கு மட்டுமே,
தீயவை செய்வதற்கு இல்லை,
மனம் இந்த நிமிடம்
சிந்திப்பதற்கு மட்டுமே,
நல்லன மட்டுமே கண்கள் அருகில்,
அல்லன விலகி ஓட்டப் படுகின்றன,
இன்ப மின் காந்த அதிர்வு
உன் அருகில் இருந்தால் மட்டுமே,
நான் வணங்கும் போதி மர புத்தனோ
இல்லையே, நீயே எந்தன் அழகு செல்ல
மென்னிலவே.
____சத்ய சாந்தி
-
இளமை என்றும் இனிமை,
பிதற்றல் கவிஞர் மொழி,
சண்டை சச்சரவு தத்தம் மொழி மீது
மழலை, உலகின் இனிமை மொழி,
இன்பம் அங்கே இங்கே உளறல்
காது கேட்க முடியாமல்,
பேச்சற்ற, மொழி தேவையற்ற
இன்பம் குழந்தை சிரிப்பினிலே,
அங்கிங்கு காணினும் கடவுளடா,
போதிக்கும் மதங்கள் இங்கே ஆயிரம்,
உன்னில் இருக்கும் கடவுளை உனக்கே காட்டும் கள்ளமற்ற
கவலையற்ற நம் எதிரில் இருக்கும் கடவுள் மழலைச் செல்வமடா மானிடா.
___சத்ய சாந்தி
-
Find not a word in my vocabulary,
To say tiery adieu to the friendly Guru,
Who pave way for so many upcoming
Writers.-
வெண்ணிலா உன் முகம் பார்க்க மாட்டேன்,
மென்னிலா உன்னை நான் தீண்ட மாட்டேன்,
வெண்ணிலா உன்னை நான் உணர மாட்டேன்,
மென்னிலா உன் சிரிப்பை ரசிக்க மாட்டேன்,
வெண்ணிலா உன் புகழ் கேட்க மாட்டேன்,
மென்னிலா உன் கவிதை படிக்க மாட்டேன்,
மனம் இல்லா கவிஞர்கள் என்னை விட்டு உனை புகழ்வதினால்,
இப்படிக்கு முகம் திரும்பிய
அழகு வெண் மலர்கள்.
_____சத்ய சாந்தி
-