வீதியுலா சென்று வந்த நிலவிற்கு
மிகுதியான களைப்பாம்
பூக்களெல்லாம் அதன் வியர்வையை
தன் மென்னிதழ்களால் ஒத்தி
எடுக்கிறதாம்-
வீதி உலாக் காண,
வெளிவந்த வெண்மதி அவள்...!
அவள் வந்தபின்
உலாவிக் கொண்டிருந்த பார்வையாவும்
அவளைச் சுற்றியே...!
#வீதி_உலா...!
#தமிழ்ச்சரம்-
இப்போதெல்லாம் தடுமாறியோ, தடுக்கியோ இல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதியோ எப்படி இருந்தாலும் பாதையோரம் விழுந்து கிடப்பவனை பார்த்ததும் அப்போதே காரணத்தை கண்டு பிடித்து விடுகிறார்கள் மக்கள் எனும் துப்பறிவாளர்கள்.... ""செம போதை"
-