வளைந்து நெளிந்த கடலலையாய்,
பின்னிப் பிணையும் கொடிச்சுருளாய்,
ஆலமர விழுதாய் படர்ந்து,
காற்றின் விசையில் ஊஞ்சலாடி,
என்னவள் காதோரம்
மெல்லிசை பாடும் சுருள் முடியே...!
#சுருள் முடி!
#தமிழ்ச்சரம்
-
காணும் இடம் யாவும் நீயாக,
உன்னுள் சிறு அணுவாய் நானாக,
பரந்து விரிந்த உந்தன் பரப்பளவில்
தொடக்கம் உண்டோ...? முடிவு உண்டோ...?
காரிருள் சூடிய உன்னை ஒளிர்விக்க
உன்னுள் குடியேறிய ஒளிர்மிகு நட்சத்திரங்கள்,
உந்தன் முடிவில்லா எல்லையைக் காணப்
பரந்து விரிந்து தேடிக் கிடக்கின்றன...!
#ஆகாயம்
#தமிழ்ச்சரம்-
பிறர்துணையின்றி தானாக தோன்றாமல்
எவ்வழியேனும் தோன்றியப்பின்,
காற்றின் துணையுடன்
எத்திசையெங்கும் பரவி,
சுற்றியிருக்கும் எவற்றையும்
தன்னுடன் அணைத்துக்கொண்டு,
தன்னிடம் அகப்பட்டவைகளை
சாம்பல் புகையாக மட்டும் விடுவித்து,
பிறவற்றை அழித்து தான் வாழ்ந்திடும்
ஓர் உயிரில்லா ஆடி அடங்கும் வாழ்வு!
#நெருப்பு
#தமிழ்ச்சரம்-
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத முதல்நாள்,
நாம் இருவரும் அருகருகில் அமர்ந்ததால் அறிமுகமானோமோ?
இல்லை..., நாம் அறிமுகமாவதற்காக அருகருகில் அமர்ந்தோமோ?
மறுநாள் முதல், நீ எங்கு அமர்ந்தாலும்
அங்கு உன்னருகில் அமர நெஞ்சம் துடிக்கும்.
தோழமை பலரிருந்தும் துணையாக என்னருகே இருந்தவன்(ள்) நீ!
நீ எடுக்கும் விடுப்பு நாட்கள் என்னருகே வெற்றிடமாய் அமைய,
நீயின்றி நான் தவிர்த்த அந்த நீண்டப்பொழுதுகளில் (நாட்களில்)
என் இடமும் வெற்றிடமாய் அமைந்திருக்கலாம்.
வகுப்பு விடுப்பு எடுத்து நாம் கண்ட
திரைப்படக் காட்சிகள் எல்லாம் உன்னருகினிலே,
மதிய வேளையில் உணவு பரிமாற்றி உண்டதாவும் உன் அருகினிலே,
இவ்வாறு அருகருகில் அமர்ந்த நாட்கள்
இப்போது நம் அருகினில்லாது கடந்துபோனதேனோ...?
#அந்த_கல்லூரி_நாட்கள்...!
#தமிழ்ச்சரம்-
பூமித்தாயின் காதல் ஈர்ப்பால் பொழிவாகவும்
கதிரவனின் கிரணக்கையால் ஆவியாகவும்
மென்மைமிகு குளிர்க்காற்றில் பனியாகவும்
தன்னுள் கொண்ட மாறும்நிலை பண்புகளால்
உலகில் வாழும் அனைத்து ஜுவிக்களுக்கும்
உயிர்வாழ ஆதாரமாக அமைந்த நீ(ர்)!
#நீர்
#தமிழ்ச்சரம்-
முதல் காணல் முற்றிலும் உறைந்துப்போக
பனிமலராய் என்முன் வந்தவளிடம்,
மனதில் பூட்டிருந்த ப்ரியத்தினை
பார்வை மீது பார்வை வைத்து
நான் மொழியும் காதல்கவி
அவள் செவி சேருமுன்,
பொன்முகம் நாணல்சூழப் பார்வை சாய்த்து,
தேன்சாயம் பூசும் செவ்விதழில்
புன்னகைப்பூ மலரும் விதத்தில்,
பூங்கோதை மனதில் என்னைப்
பூச்சூடும் மணவாளனாக்கி,
கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலாய்
மறைந்தவளை, மீண்டும் காண...,
விண்ணுலகம் சென்றும் தேடிடுவேன்,
மணவாளனாய் அவள் கரம் பிடிக்க...!
#அவளோடு என் உலகம்
#தமிழ்ச்சரம்-
ஆங்காங்கே சிதறி (கிடந்)விழுந்தாலென்ன...?
ஒற்றுமை என்னும் உணர்வு தலைத்தோங்கினால்,
காற்றாற்று வெள்ளமாய் மாறி
கடினப்பாறையையும் கரைத்தெரிவோம் வா...!
#மழைத்துளி
#தமிழ்ச்சரம்-
துவண்ட மனதை இளைப்பாற்ற
இடைவெளி வேலையில் இடைவிடாது
உன்னைத் தேடித் திரியும் பொழுதில்
உலகமே காலடியில் கிடந்தாலும்
என் கையில் நீ கிடைக்கும் வரை
எனக்கு ஏது வேறு உலகம்...!
#தேநீர்(டீ)
#தமிழ்ச்சரம்-
காலப்போக்கில்...,
நினைவில் மறைந்துபோகும் நிகழ்வுகளை,
நொடிப்பொழுதில் பதித்த பதிவால்...,
காலந்தோறும் மறையாத நினைவாக
நம் கண்ணால் காண
கடந்து சென்ற நிகழ்வுகளை
ஆதாரமாக அமைத்த ஒன்று...!
#புகைப்படம்
#தமிழ்ச்சரம்-