QUOTES ON #மூக்குக்கண்ணாடி

#மூக்குக்கண்ணாடி quotes

Trending | Latest
16 JUN 2020 AT 23:12

மின்மினி பூச்சின்

வெளிச்சத்தில் மிதக்கின்ற

எழுத்துகளின் மேலோட்டம்

காண மூக்குகண்ணாடி

முந்தியடிக்கிறது கண்களிடம்...

-


24 JUN 2017 AT 0:46

அவள் மூக்கிற்கும் கண்களுக்கும் உரிமை கொண்டாடும் மூக்குக்கண்ணாடி என் முதல் எதிரி!

-


4 APR 2020 AT 22:01

என் நாட்களை

எளிதாக கடக்க

பொழுதும் என்னுடன்

ஒட்டிக்கொள்கிறாய்

ஒய்யாரமாய்

மூக்கின் மேல்...

-


14 MAY 2020 AT 22:50

என்னதான் என்னுடனே

இருந்தாலும் என்னுடைய

கனவுகள் யாவும் என்

கண்ணாடிக்கு தெரிய

வாய்ப்பில்லை... என்னுடைய

விழிகள் என்னை விட்டு

விடை பெறாத வரை...



-


4 APR 2020 AT 8:07

என் தெளிவற்ற பார்வையும்
தெளிவாக்கும்
காதல் மூக்கு கண்ணாடி நீ ....!

-


16 AUG 2020 AT 18:45

தேடி தேடி பார்த்தேன்
கண்ணில் இருக்க வேண்டிய நீயோ
தலையில் இருப்பாய்
என்று அறியாததால்..!

-



பயமுண்டு
நின் மூக்கு
கண்ணாடிக்கு,

ஒவ்வொரு முறையும்
அதை கழட்டி
நீ புகைப்படம்
எடுக்கும்
தருவாயிலும்,

பிரிவு நிரந்தரம் ஆகுமோ என்ற
பயமுண்டு
நின் மூக்கு
கண்ணாடிக்கு

-


25 MAY 2019 AT 11:24

புன்னகைத் தவழும்
இதழ்களை ரசிக்க
தவறினேன்,உந்தன்
மூக்குக்கண்ணாடியோ
நேரம் தவறாமல்
என்னை ஈர்ப்பதால்

-