கோட்பாடுகளோ
கட்டுப்பாடுகளோ
விதிமுறைகளோ
மதில் சுவரோ
கம்பி வேலியோ
மின் வேலியோ
இவற்றை கடந்து
காதல் துளிர்த்து கொண்டு தான் இருக்கும்
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பருவ காலங்கள் கடந்து...!
-
Ram kumar
(ராம்)
476 Followers · 405 Following
எல்லாம் கடந்து போகும்..!
Joined 19 August 2018
25 MAR 2024 AT 21:03
17 MAR 2024 AT 19:22
எது எப்படியோ
தூக்கம் வராது
புரண்டு படுக்கும் தனிமைக்கு
இவ்விரவை காகிதம் போல
கிழித்து வீசும் திறன் உண்டு...!
-
17 MAR 2024 AT 19:13
எதன் பொருட்டும்
அமைதியின் கால்களை
இறுக்கமாக பற்றிக் கொள்ள வேண்டும்
அடுத்த நொடி எதிர் கொள்ள...!-
17 MAR 2024 AT 19:11
மீண்டும் வருதலைக் காட்டிலும்
மீண்டு வர வேண்டும்
வாழ்வின் கதவிடுக்கில்
நசுங்கிய வலியை பெரிதுபடுத்தாமல்..!
-
6 FEB 2022 AT 20:32
விரைவில் வாழ்ந்து முடியும்
இந்த வாழ்கையில் எத்தனை
குறை பேசுகிறது இந்த மனம்...! — % &-
6 FEB 2022 AT 20:30
என்னை நான்
விறகாகவே
எரித்தேனே தவிர
உன்னை எரிக்க நினைக்கவில்லை
ஆதலால் தான் இந்த தனிமை...! — % &-