தவறு செய்வது
இயல்பென்றாலும்...
அதை ஒப்புக் கொள்ளவோ
திருத்திக் கொள்ளவோ
முயலாதிருப்பது மனித
இயல்பே இல்லை அல்லவா?...!-
குறையை மட்டுமே
தேடுபவருக்கு ...
எந்த நிறையிலும் ஒரு
குறையாவது தென்படவே
செய்கிறது...!-
மனிதர்கள் அவர்களுக்கு
உண்டான இயல்பிலேயே
தான் இருக்கிறார்கள்...
சில இயல்பு பிறழ்தவர்களுக்கு
தான் அதை ஏற்க
முடிவதில்லை...!-
அழுத்தப்படும் அழுத்தத்திற்கு
ஏற்ப கையில் இருந்து நழுவி
விழும் மணல் துகள்கள் தான்
மனித மனங்கள்...
சுதந்திரமாய் வைத்திருந்தால்
கையில் இருந்து நழுவாது...!
-
உண்மைக்கு புறம்பாகவே இருந்தாலும், தமக்குரியவரை காப்பாற்ற நினைப்பது தான் மனித இயல்பு.
-
பொக்கிஷமாக உணரும் அனைத்து பொருட்களுமே..!! என்றோ ஓர் நாள் எவரும் கண்டு கொள்ளாத இடத்தில் வீசுவதே மனித இயல்பு..!!— % &
-
வாடும் வரை தான் பூக்களை பிடிக்கிறது
They like flower only until it's fresh .-
எல்லாம் செய்து முடித்தபின்
நான் அன்று அவ்வாறு
செய்யாமல் இருந்திருந்தால்
இன்று இவ்வாறு
நடந்திருக்காது என்று
புலம்புவது மனித
மனதின் இயல்பு..-