புறநானூறுக்குப் புதுமை செய்தவன்
வரிகள் கீழே-
12 FEB 2020 AT 11:32
யாண்டு பலவாக நரையில வாகுதல்யாங்கா கியரென வினவுதிராயின்மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையர் என் இளையர்:
வேந்தனும்அல்லவை செய்யான் காக்கும் அதனதலைஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்பலர் யான் வாழும் ஊரே .....
- புறநானூறு-
12 JUL 2019 AT 15:33
புறமொன்று கொள்;
உன் புறமொன்று கொள்;
புறங்கூறாமல் இப்புறமொன்று கொள்;
எப்புறம் எனினும் அப்புறம் கொள்; இப்புறம்,அப்புறம் எப்புறமாகினும் தமிழின்,தமிழரின் நனி சேர்க்கும் நற்புறம் கொள்..-
18 JUL 2019 AT 16:19
புறநானூற்று போருக்கு செல்கிறேன் உன் புருவத்தை எனக்கு கொடு, அகநானூற்று அரங்கிற்கு செல்கிறேன் உன் இமைகளை எனக்கு கொடு,
-
14 AUG 2019 AT 18:00
அகநானூற்றின் பாடலாய் இருந்த என்னை உன் '' காதல்'' புறநானூற்றின் போர்கலமாய் மாற்றிவிட்டது
-