தூரத்தில் இருந்தே ரசி
தூக்கங்கெட்டு துடி
புகைப்படங்கள் பதுக்கிவை
புன்னகை தொலை
கனவுகளில் கைப்பிடி
கடந்து போகையில் குமுறு
பேசவேண்டுமென நினை
பேசபோனால் கைநடுங்கு
அவள் பெயரை முனுமுனு
அவள் நினைவுகளிலே வாழ் .
காதல் செய் காதல் செய்
தீராமல் காதல் செய்
கொடுத்து பெறுவது
மட்டுமல்ல காதல்,
கொடுத்துக்கொண்டே
இருப்பதும் கூட காதலே.....
-
📝வரிகளின் காதலன்
🎤பாடல்களின் பிரியன்
🎵இசையின் நண்பன்
📀தமிழ் திரைப்பாகூட... read more
வாழ்க்கையை நோக்கி ஓடும் பாதையில்
கல் இருந்தால் என்ன? கண்ணாடித்துண்டுகள்
இருந்தால் என்ன?
ஓடிக்கொண்டே இருப்போம்,
வலிகளின் முதல்நிலைதான்
வெற்றியின் கடைசிநிலை.
-
உன்னோடு பேசி தீர்க்கவேண்டிய
அந்த அழகான அந்திப்பொழுதுகளை
நான் மறைத்துவைக்கப்பட்ட
உன் புகைப்படத்துடன் பேசி தீர்த்துக்கொள்கிறேன்
இந்த இரக்கமற்ற இரவுகளில்
பெரும் வலிகளுடனே...-
பெரும் பைத்தியக்காரத்தனம்
என்று நீங்கள் நினைத்தால்
நினைத்துக்கொள்ளுங்கள்
பெருங்காதலை சுமந்துக்கொண்டு
சிறுமழலையாய் சேமித்து வைக்கும் எந்தன் சின்ன சந்தோஷம்தான் இப்பொக்கிஷம்.-
உடல் உரசி ஒருத்துளி
சிந்திவிட்டாள் போதுமா...?
பத்துமாத குருதியை ஒருசேர்த்து
உயிர் உருவாக்க அவள்
பட்டபாடுதான் அறியுமோ?
வளைகாப்பு முடிந்தவுடன்
அம்மா வீட்டிற்கு அனுப்பிடும்
சில புருஷர்களுக்கு தெரியுமோ?
ஜனன நேரத்தின்
மரணவலிகள்
என்னவென்று!.-
எப்டியோ ஒருவழியா போராடி
வெற்றி பெற்று கோப்பைய வாங்கி
இன்னொருவர் கையில கொடுத்துட்டு
ஏதோ ஓர் மூளைல நின்னு
அழகு பாக்றவன் பெயர்தான்
தோனி....-
உன்னைப்போலவே
சொல்பேச்சை கேட்பதில்லை!
நீ வாரிமுடிந்தப்பின்பும் உன் நெற்றியை
உரசி சரிந்துவிழும் அந்த அழகான துண்டுமுடி.-
வாசிக்கவும் செய்கிறேன்!
நேசிக்கவும் செய்கிறேன்!
புத்தகநடுவில் பதுக்கிவைத்த
பொக்கிஷப்புகைபடம் நீயானதால்.-
அடிவயிற்றில் பாயும்
ஆயிரம் கத்திகள்!
வெட்டுப்பட்டுக்கிடக்கும்
விலா எலும்புகள்!
புடைத்துபிண்ணும்
கால் நரம்புகள்!
சொட்டு சொட்டாய்
உதிரும் உதிரங்கள்!
இவைகள்தான் பத்துத்திங்கள்
உனை சுமக்க பக்குவமடையும்
அந்த மூன்று நாட்கள்.
-
கடவுள்களே என்னை
மன்னித்துவிடுங்கள்
விபூதியோ குங்குமமோ
இப்பொழுதெல்லம் எனக்கு
பிடிப்பதில்லை
காரணம்?...
இருவிரல்க்கொண்டு
ஒருவிரலில் அவைகளை
இடும்பொழுது என்
அனுமதியின்றி என்னவளின்
மூக்கை முத்தமிடுகிறதே...
-