-
24 JUL 2019 AT 14:34
எத்தனை
புகைப்படங்கள்
எடுத்தாலும்
சாலை நடுவில்
என் கை பற்றியே
என்னைக் கைப்பற்றிய
முதல் நாளை
என்றுமே
மறக்க முடிவதில்லை-
12 MAY 2021 AT 19:26
இருளினைப் பூசிக்கொண்ட
அந்த வீட்டினுள்
சிரித்தபடி மாட்டியிருக்கிறது
அம்மாவின் புகைப்படம் !
-
25 FEB 2020 AT 19:30
நீ அனுப்பும் புகைப்படங்களில் எல்லாம்
கடற்கரையில் நான் தேடும் குண்டூசியாய் நீ !!-
26 APR 2021 AT 14:05
வானம் போல
எல்லையற்ற அன்பை
பிரிவெனும் சுழல்
புகைப்பட சுருளில்
அடக்கி கொள்கிறது..❤️-
6 JUN 2020 AT 18:53
உன் அளவுக்கு
துரதிருஷ்டசாலி
அல்ல உன்
புகைப்படங்கள்...
வேண்டுமளவு
முத்தங்களை
வாங்கிக் கொள்கிறது
என்னிடமிருந்து !-
10 JAN 2020 AT 9:13
பூக்களோடு சேர்ந்து பனித்துளிகளும்
அணிவகுத்து நிற்கின்றன புகைப்படம்
எடுத்து கொள்வதற்கு-