நான் கொண்டாடும் இந்த பிரான்சிஸ் கிருபா யார்?
பிரான்சிஸ் கிருபா குப்பனோ சுப்பனோ இல்லை.
கன்னி என்ற முதல் நாவலிலேயே ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.
அவருடைய கன்னி நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின் தேர்ந்தெடுக்கப்பட்டு வயது குறைவாய் இருப்பதன் காரணமாக நிராகரிக்கப்பட்டது.
காமராஜ் தி கிங் மேக்கர் திரைப்படத்திற்க்கான திரைக்கதை எழுதியவர்.
வெண்ணிலா கபடிக்குழு மற்றும் அழகர்சாமியின் குதிரை இரண்டு படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.
தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இது வரையில் 7 கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
எட்டாவது கவிதை தொகுப்பு "நட்சத்திர பிச்சைக்காரன்"எனது பதிப்பகத்தில் வெளிவருகிறது.
சுஜாதா விருது மற்றும் 5 விருதுகளை வாங்கியுள்ளார்.
அத்தைகைய மிக பெரிய ஆளுமை மகாகவி
பிரான்சிஸ் கிருபா.
அவர் ஒன்றும் குப்பனோ சுப்பனோ அல்ல.
சமீபத்திய விருது வழங்கும் விழாவில் கரிசல் எழுத்தாளர் தமிழின் மூத்த படைப்பாளி கீ.ரா அவர்கள் நாங்கள் அனைவரும் தான் உங்கள் காலில் விழவேண்டும் நீங்கள் விழக்கூடாது அத்தகைய உன்னத படைப்பாளி நீங்கள் என்று வெளிப்படையாக மேடையில் ஒலிப்பெருக்கியிலேயே கூறினார்.
அதனால் தான் நான் அவரை மகாகவி என நான் குறிப்பிடுகிறேன்.
-காஞ்சி வழிப்போக்கன்.🙊-
வழிப்போக்கனுடன் தேநீர் நேரம்.
இன்னைக்கி ஞாயிறு காலை
10.30 மணிக்கு மகாகவி மெல்லிய மனசுக்காரன் ஜெ.பிரான்சிஸ் கிருபா அண்ணனுடைய பேட்டி கலைஞர் டீவியில பாருங்க.
எமக்கு தொழில் கவிதை.
இது முகநூல் நண்பர்களுக்கு எழுதினது சில விஷயங்கள் உங்களுக்கானது அல்ல கவனமா கடந்து போய்டுங்க.
மேலும் கீழே...✍️👇✍️👇-
இலையுதிற் காலம்
ஜெ. பிரான்சிஸ் கிருபா
சிதைந்த உடலுமாய்
நிழலில் அமர்ந்து
யாசிக்கும் கிழவனை
பணயம் வைத்து
கைச் சிட்டுகளாய்
பழுத்த இலைகளை இறக்கி
பகலைச் சூதாடிக் கழிக்கின்றன
பூவரச மரங்கள்.
--பிரான்சிஸ் கிருபா
ஆழ்ந்த இரங்கல்
-
#கவிஞர்_பிரான்சிஸ்_கிருபா_அண்ணனுக்கு
தனிமையை பாரமாய் எண்ணும்
நீயிருக்கும் அந்த தனியிடத்தில்
நானிருக்கும் இடத்தை போல
உருக்குலைய வைக்கும் பார்வைகளில்லை
நிலைகுலைய வைக்கும் சொற்களில்லை
மல்லாக்க கவிழ்த்துப்போட்டு
மார் மீது மிதிக்கும் அவமானங்களில்லை
அக்கறையாய் திரும்பச் சொல்லி
விலாவில் கத்தி சொருகும் கொலைவெறியில்லை...
துரோகத்தில் தொலைந்து போகும்
ஆபத்துக்களில்லை
எதுவானபோதிலும்
நீயும் நானும் இருக்கும் அந்தந்த தனியிடத்தில்
அந்தந்த சாம்ராஜ்யத்தில்
நாம் சக்ரவர்த்திகளே.
-காஞ்சி வழிப்போக்கன்.🙈-
#மழை
#கவிஞர்_பிரான்சிஸ்_கிருபா
#மெல்லிய_மனசுக்காரன்
முதல் கன்னி என்ற புதினத்திலேயே
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இலக்கிய ஆளுமை இது வரையில் ஆறு கவிதை தொகுப்புகளை வெளியிட்டு அனைவரையும் ஆசுவாசப்படுத்திய படிக்காத மேதை பிரான்சிஸ் கிருபா அண்ணன் அவர்களின் மழை மீதான வருத்தங்கள்.
முன்பெல்லாம் மழை என்றால் ஏதேதோ இனிய நினைவுகளை எனக்குள் கொண்டு வரும் ஆனால் இப்போதெல்லாம் அது #பிரான்சிஸ்_கிருபா அண்ணனையே அந்த மழை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.
விதி.
சிறகுகளை சுமந்தபடி
தரையில் நடப்பவனை
உங்களுக்கு தெரியும்
என்ன செய்வதென்று
எனக்குத்தான் தெரியவில்லை
உறக்கத்தில் அழுபவனை.
அதிர்வை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது இந்த கவிதை.
கீழே தொடரவும்.-
கணங்கள் தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும் போது
நீயேனும் ஏன் என்னை கொஞ்சம்
மன்னிக்கக் கூடாது.
-கவிஞர்.ஜெ.பிரான்சிஸ் கிருபா-
நள்ளிரவில் அறுத்தோம்
நித்திரை பிரியாமல்
பெரும் சப்தத்தோடு அது
சரிந்து விழுந்தது
மற்றொரு உறக்கத்தில்
காலையில் கண்விழித்த
இலைகளெல்லாம் கண்டன
ஒரு கனவு போல
காணாமல் போன
மரத்தை
-பிரான்சிஸ் கிருபா-
எல்லா வழிகளும்
கூடிப் பிரியும் இடமே
வாழ்க்கை
என்றானபின்
வெறுமையின் குடுவையில் திரண்ட
நீர்க்குமிழியாகி
உடைந்து மறையும் தருணம் வரை
அவன் மிதந்து போனால்
நடந்து திரிபவர்களுக்கு
என்ன நஷ்டம்
-பிரான்சிஸ் கிருபா-
விழித்தபோது
கலகலவென்று
வகை வகையாய்
வாய் கிழியச் சிரித்தாலும்
உறக்கத்தில் உதிரும்
சிறு புன்னகை
உயிரைப் பிழிகிறதே
ஏன் வாழ்வே ?
-பிரான்சிஸ் கிருபா-