கடலலை உதறித் தள்ளிய
நுரைகளை கரையள்ளி
அணைப்பது போலவே
உன் நினைவலைகள்
தடம்பதித்த என் காதலை
விழிபள்ளம் தாங்கிக்கொள்கிறது...!!!-
இங்கிருந்து வெகு தொலைவில்
தனித்திருப்பவனுக்கு
என் நினைவலைகளை
துணையாயிருக்க கடத்துகிறேன்...
ஏற்றுக்கொண்டு இதய அலைகளை
சமன் செய்துகொள்வான் என்ற
நம்பிக்கையுடன்...!!!-
நினைவலைகள்
தினம் தினம்
வந்து விடுகிறது இரவு,
களைப்பின்றி
தந்துவிடுகிறது
உன் நினைவு,
உலக வண்ணங்கள்
அனைத்தும் உறங்க,
நிலவின் ஒளியில்
பல நட்சத்திரங்கள் உறங்க,
மல்லிகை மொட்டும்
மலர்ந்து உறங்க,
கடலிலும் என் மனதிலும்
உறங்காத அலைகள் எழுந்தாட,
நிலவு பெண் நடைபோட்டு
உளவு பார்க்கிறாள்,
என்னில் தீராத
உன் நினைவலைகளை !-
புண்பட்ட போதிலே உன்
புலன முகப்பு
புகைப்படத்திலே..
புலப்படாத ஓர்
அதிசயத்தை
காண்கிறேன்..!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
நிசப்தமான
இரவுகளில்
நீந்திக்
கொண்டிருக்கும்
நின்
நினைவலைகளில்
மூழ்கி
மூச்சடைத்து
முட்டி மோதி
கலைநயத்துடனே
கருத்தரிக்கிறது
என் கண்ணீரும்!
கவிதைகளும்!-
கடல் அலைகள்
பாதம் தொட்டால்
இதமாக இருக்கும்
ஆனால்.,
கழுத்தைத் தொட்டால்
அடுத்த சில நிமிடங்களில்
நம்மையே விழுங்கி விடும்.
அதுபோல் தான்
நினைவலைகளும்.
அதன் பிடியில்
நாம் சிக்கினால்
அவ்வளவு தான்.
பட்டும் படாமல்
படரட்டும் மனதில் !-