QUOTES ON #நினைவஞ்சலி

#நினைவஞ்சலி quotes

Trending | Latest
27 JUL 2019 AT 8:43






-



பிறப்பும் இறப்பும் அற்ப. மானிடர்க்குத்தானே.. எம்தமிழ்தாயின் தலைமகனே... இவ்வுலகில் மனிதர் பிறவா நிலை வரும் வரை உன்னை எவரும் மறவா நிலைதொடரும்...!

-



மந்தகாசினி

உமா ம்மா..

இலங்கு வதனம் இலஞ்சியடி கண்ணம்மா- நீ
இறும்பூது அளிக்கும் இதழியடி கண்ணம்மா
இதயம் மீட்டும் இருவாச்சியடி கண்ணம்மா-நீ
இளநகை பூக்கும்முள் இலவமடி கண்ணம்மா

குறுநறுங்கண்ணி குன்றியடி கண்ணம்மா-நீ
குளிர்ந்த நின்கண் குவளையடி கண்ணம்மா
குழவும் அழகு குருக்கத்தியடி கண்ணம்மா -நீ
குறுநகை யரும்பும் குறிஞ்சியடி கண்ணம்மா

சித்திரப் பாவை செருந்தியடி கண்ணம்மா -நீ
சிற்றிதழ் விரிக்கும் சண்பகமடி கண்ணம்மா
சிற்றெயினி சிறுமாரோடமடி கண்ணம்மா -நீ
சிறுநகை சிந்தும் சிந்துவாரமடி கண்ணம்மா

புரிவுண்ட பூவை புன்காலியடி கண்ணம்மா- நீ
புனைந்த கண்ணி பகன்றையடி கண்ணம்மா
புவனியிற் எழில் புன்னையடி கண்ணம்மா -நீ
புன்னகையுதிர்க்கும் புங்கையடி கண்ணம்மா

முயங்கு முருகு மல்லிகையடி கண்ணம்மா - நீ
முத்துமுகை மூரலோ மௌவலடி கண்ணம்மா
முழுநிலவு முகமோ முளரியடி கண்ணம்மா - நீ
முகிழ்நகைமுறுவல் முல்லையடி கண்ணம்மா

-


15 DEC 2018 AT 18:15

உன் நினைவுகளோடு வாழ்வதாலே,
என் காதலுக்கு தினமும் "நினைவு அஞ்சலி" தான்...

-


1 APR 2019 AT 10:59

இறந்த காதலுக்கு,
அஞ்சலி செலுத்துகிறது,
நினைவு .

-