தேடல்கள் ♥️
அம்மாவை தேடி சென்றேன் அன்பு என்றது
பணத்தை தேடி சென்றேன் செலவு என்றது
காதலை தேடி சென்றேன் காமம் என்றது
வெற்றியை தேடி சென்றேன் வாய்ப்பு என்றது
வாழ்வை தேடி சென்றேன் மரணம் என்றது
அனைத்து தேடல்களுக்கும் ஒரு முடிவு உண்டு
முடிவற்ற தேடல் தான் நமக்குளே இருக்கும் அளவற்ற ஆசைகள்.-
அவசரமாக எதையோ தேட
என்றோ தொலைத்த
விரும்பிய பொருள் கிடைக்கையில்
தேடல்கள் அர்த்தப் படுகின்றன.-
தேடிவந்து காட்டிய
தொலைதூர அன்பு
தொலைந்து போக
துடிக்கிறதா.....
தெரியாமல்தான்
தவிக்கிறேன்!
தாமதங்கள்
தலைகாட்டாது
தள்ளிவிடுமோ என்ற
தயக்கத்தில் நான்!-
அவிழ்க்கப்பட்ட
தேடல்களில்
அணைந்து போன
உறவுகளாய்
தொலைந்து
போகாத வரை
நிம்மதியாகவே நான்!-
திசையற்ற விடியலாய்
திகைப்புற்ற மனதினடியாழத்தில்
புதைந்த வேர் பற்றி எழும்பும் நீரென விரவி
அவ்வடர் சுவற்றிற்கு அப்பால்
இருட்பகையொளிச் சிதறி என்னுள் தெளித்து
உயிர்ச்சுழற்சியின் விசையில் நுழைந்து
தேடிச் சலித்த தருணத்திலும்
ஏதோவொன்றின் முடிச்சவிழ்க்க
வேட்கை குறையாமல் மூழ்கிமீள்கிறேன்
மீண்டும் தொடங்கிய தேடலோடு...!!!
-
இரவின் இருளில்
இருவரின் இணைவு
உதயத்தின் பின்னால்
தேடலின்றிய நகர்வு
-
நிம்மதியை தேடுகின்றனர்
மற்றவர்கள் நிம்மதியை
கெடுப்பதறியாது...
வாழ்கையை தேடுகின்றனர்
வாழும் வாழ்கையின் உன்னதம்
புரியாது...-
என் மகிழ்ச்சி என்னிடம்
தான் உள்ளது....
நான் தான் அது புரியாது
உன்னிடம் தேடி வந்தேன்..
உணர்ந்தேன்..... நன்றி 🙏-
தேடிக் கொண்டே பயணிக்கும் நம் பாதையில் எத்தனை ரோமாபுரிகள் கடந்தனவோ
-