Kalyani Sekar   (கல்யாணி)
24 Followers · 10 Following

Joined 10 August 2018


Joined 10 August 2018
12 OCT 2021 AT 21:17

சுவைத்து அருந்திடும் போது
கடித்துக் காயப்படுத்தினாலும்
கண்ணீர் மறைத்து
காட்டும் புன்னகையால்
தலை வருடும் தாயாய்
சகித்துக் கடந்து செல்கிறேன்
ஒவ்வொரு முறையும்
நீ தரும் வலிகளை

-


12 OCT 2021 AT 21:15


சமாதானம் பேச வருகிறாய்
ஆயுதத்தோடு

-


4 OCT 2021 AT 9:04

கருத்த மேகங்கள்
கரைந்து கரைந்து விழுகிறது
நனைந்த குளம்
நனையாத நிலாவை
ஈரமாக்கிய இரவில்
பேரமைதியில்
அல்லியும்
நானும்

-


9 JAN 2021 AT 23:45

பழகிய காலத்தின் நினைவுகள்
வற்றிய ஏரியில்
இடிபடாத மதகுகளாய்

-


9 JAN 2021 AT 23:43

ஓர் ஆற்றில் தான் பயணித்தோம்
கடல் சேர்ந்த மீனின் கர்வம் உனக்கு
வலைக்குள் மாட்டாத நிம்மதி எனக்கு

-


6 JAN 2021 AT 23:37

வா
என் வாடிய தோழனே
வந்து இளைப்பாறு
என் நிழலில்
நீ
தூக்கிப் போட்ட விதையின்
விருட்சம் தான் நான்

-


6 JAN 2021 AT 23:34

நால்வகை குணங்களையும்
யார்தான் வரையறுத்தார்?
பாலினமற்ற மனதுக்கு

-


6 JUL 2020 AT 18:44

இறைவனின் தட்சிணை முழுவதும்
இல்லாதான் வயிற்றை நிரப்பும்
இந்த ஊரடங்கு காட்சிகள்

-


6 JUL 2020 AT 18:41

நம் உரையாடல் இன்னும் முற்றுப் பெறாமல்

-


6 JUL 2020 AT 9:40

நரம்பிலா விரலிலா
பிசகு எதிலென்று
பிறகு பார்த்துக் கொள்ளலாம்
முதலில் வீணையைத்
தூசு தட்டுகள்

-


Fetching Kalyani Sekar Quotes