QUOTES ON #கவலை

#கவலை quotes

Trending | Latest
18 OCT 2021 AT 20:00

கவலையை அடையாளம் காண
யாராலும் முடியும்...
காரணம் காண யாரோ ஒருவரால்
தான் முடியும்...!

-


7 OCT 2021 AT 19:22

இத்தோடு தலைமுழுகி
தொலைத்து விட்டோமென்று
புதைத்து விடுவதெல்லாம்
நெகிழியாகவே...!

-


30 JAN 2019 AT 19:23

அந்த சந்தோஷம் மிகவும்
கொடுமையானது !

சோகம்,கடினம்,கவலை,
துக்கம் மிகும் நேரத்தில்,
அதை சற்றும்
அனுபவிக்கமுடியா வண்ணம்
இறைவன் தரும்
அந்த சந்தோஷம்
மிகவும் கொடுமையானது !
ஏனெனில் இருக்கும் சூழ்நிலையில்
எத்துனை முயற்சித்தாலும்
அந்த சந்தோஷத்தை
அனுபவிக்க முடிவதில்லை !

-


28 MAY 2020 AT 9:24

எல்லாம் கடந்து போவதை
போலத்தான்...
கவலையும் கடக்கிறது...
ஆனால் மனம் தான்
அதை கடக்க விடாமல்
இழுத்து பிடித்து கொண்டு
கவலை பட்டு கொண்டிருக்கிறது...!

-


17 JUN 2020 AT 6:02

அழுதால் கவலை தீர்ந்து
விடுமெனில் விழிநீரின்
கடைசி சொட்டும் தீரும்
வரை அழுவதில் தவறே
இல்லை தான்...
ஆனால் தீராத ஒன்றிற்காக
ஒரு சொட்டு கண்ணீரை
விடுவதும் வீண் தான்...!

-


5 JUL 2020 AT 7:10

நேற்றைய மகிழ்ச்சியை
இன்று கொண்டாடாத மனம்...
அதற்கு முந்தைய கவலைக்காக
இன்றும் வருந்துகிறது...!

-


14 OCT 2019 AT 12:44

இடையூறு செய்யவே களைப்பின்றி
இம்சை செய்கிறது கவலைகள்.

-


11 OCT 2022 AT 13:40

வாழ்க்கையில்
ஒன்று
போனால்
மற்றொன்று
கிடைக்குமோ
இல்லையோ
ஒரு கவலைக்கு
பிறகு வரும்
மற்றொரு
கவலை
அந்த கவலையை
மறக்க வைக்கவே
செய்கிறது.....

-


1 DEC 2020 AT 7:27

சலிப்பதேயில்லை போலும்
இந்த மனதிற்கு...
எந்நேரமும் கவலைகளை தூக்கி
வைத்து கொண்டாடுவதற்கு...
ஒருகட்டத்திற்கு பிறகு எதுவும்
தீர்ந்து விடுவது வழக்கம் தான்...
இந்த மனதிற்கு மட்டும் எங்கிருந்து
தான் கிடைக்குமோ ?

-


1 JUN 2020 AT 10:09

கவலையின் போதே
கண் விழிக்கிறது...
உறங்கி கிடந்த
உண்மைகளெல்லாம்...!

-