அடங்கி விடுமா என்ன?.......
⬇️⬇️⬇️⬇️⬇️-
விண்ணைத் தொட்ட
உன் பூஞ்சிரிப்பில்
சிலிர்த்து சிலிர்த்து
சிவந்த மேகம்
தேம்பித் தேம்பிப்
பெய்த மழையில்
நனைந்த எனக்கோ
இன்று காதல் காய்ச்சல்!-
உனக்காக காத்திருப்பதாகச் சொல்லி
ஓடிவந்து நீ அளித்த என் ஒற்றை
குறுஞ்செய்தி பதிலில் ஏனோ
எனக்கு மூச்சிறைக்கிறது
என்னவனே...!!!-
மீண்டும் மீண்டும் பிடித்துப்போகும்
உன்னிடத்தில் மீள முடியாமல்
நானும் என் காதலும்...-
முற்றத்து நிழலவன் என்
மூன்றாம் பிறை நிலவவன்
முந்நூறு முத்தங்கள்
முதல் இரா பதிந்து
முடித்தவன்
மடி தவழும் என்
மழலையவன்
மனம் தவழும் என்
மன்னனவன்
மணம் கமழும் அவன்
மார்பணைத்து
மஞ்சத்தை தான்
மறந்து நிதம்
முகம் பார்த்து
மகிழ்ந்திடவே தவ
மயக்கத்தில் நானுள்ளேன்
மங்கை என் வலி தீர
மழைநீர் அது போல
மலர்களால் நனைத்திடவா!
மலர் இதழ்களால் இணைத்திடவா!-
அசைவுகளற்ற
மெளனமான
பொழுதுகளில்
இசையாலே
நனைக்கிறாய்!
இதுதான்...
மெளன ராகமோ!
-
தவிப்பில் தொடங்கிய தேடல்
தாவிக் குதித்தது கற்பனையில்
திக்கு தெரியாமல் தவித்தும்
தீண்டி செல்லாமல் இல்லை
துன்பங்களை களவாடியே
தூற்றி தூர போட்டாலும்
தெரிந்த உன்னை
தேடாமல் இருந்ததில்லை
தைத்தாலும் மறந்ததில்லை
தொடாமல் இருந்தும்
தோன்றியதை எழுதாமல் விட்டதில்லை
தௌதமாய் மனம் இப்போது....-
உனை நினைத்து
நெற்றியில்
வைத்த குங்குமம்
எனை நானே ரசித்த
முதல் அனுபவம்
நீயடா-