மாவீரர் நாள்
தமிழினத்திற்காக தன்னுயிர் தந்த தியாக சிறகுகள் !
எதிரிகளால் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை,எங்கள் எண்ணத்தை எரியூட்ட தூண்டுகிறார்கள் !
மாவீரர்கள் கல்லறையில் புதைக்கப்படவில்லை,எங்களின் கனவுகளில் விதைக்கப்படுகிறார்கள் !
- உ.சாய் மணி 🖋-
ஈழம்
முன்பு தமிழர்கள் ஆண்ட ஈழம்
பின்பு ஆங்கிலேயரால் சிறுப்பான்மை இனம் ஆனது !!!
நாங்கள் கேட்டது வாழ இடம் ஆனால்
நீங்கள் அழித்தது எங்கள் இனம் !!!
கோடிட்டு வாழ கோரிக்கைக் கொடுத்தோம் ஆனால்
நீங்கள் வாக்காளர் பட்டியலில் கோடிட்டு எங்களைக் கொன்றீர்கள் !!!
வாழ்ந்த இடத்தில் வாழ இடம் கேட்ட எங்களை
வஞ்சகத்தால் வீழ்த்திவிட்டீர்களடா !!!
உ. சாய்மணி-
சயனைடு குப்பியிலே
சாவையு மெச்சரித்த,
எம் இன
ஈழ போராளிகளே,
நின்னன் நிழலில்
நிலைத்த ஆலவிழுதுகளாம்,
தமிழ் முலைப்பாலுண்ட
திமிர் வீரர்கள்,
கடைக்கோடி நிலத்தினும்
கர்வமிகு காவலனாய்,
மக்கள்தன் மனதினிலே
மகுடந்தரித்த மாவீரர்களே!
இந்து மாகடலிலே
ஈழ மண்ணின்,
இனத்தை யறுக்க
ஈனமுற்ற செயலுடைத்த,
அரசாங்க கூலிகளின்
ஆணிவேரை யசைத்து,
இனியும் பொறுக்காதென
அறைகூவலிட்டு நாம்
ஆர்ப்பரித் தெழுவோம்,
ஈழத் தாயகம்
வீரிட்டு மீண்டெழும் ,
விடுதலைப் புலிகளும்
தமிழீழ சுதந்திரமும்!-
"செத்தவனுக்காக அழுதவன் பல கோடி இங்கே, உன்னை போல் அழுதவனுக்காகவே செத்தவன் யார் இங்கே".
-
உங்கள் நெஞ்சத்தை கேளுங்கள்
நீங்கள் வீரன் இல்லை
போர் நீதி தெரியாத உங்களுக்குள்
பேராண்மை மறைந்து விட்டது
ஏவி விட்ட கூட்ட கூவல்
கழுத்தை புலிக்கு ஒப்பானது
புலிகளின் பலிகள் துரோகமே
ஈழ மண்ணில் ஈரம் இருக்கும்
நீர்த்து போகா புலிவீரமும் இருக்கும்
திரும்பி அடிக்கும்வரை தீராமல் இருக்கும்
-