அறை மணி அவளுடன் பயனப்பட்ட
மல்லி,
வாசத்தை அவள் கூந்தலுக்குள்ளே மறந்து வாடிச் செல்கிறது...-
செவிக்காக பேச துவங்கி, உன் சிணுங்கலை ரசிக்க சற்றே இறங்கி வழிகிறது என் உதடு..
-
போனஸ்!
குட்டி போட்ட வட்டியை கொஞ்சமேனும் வெட்டி போட்டு,
நிம்மதியாய் நாளு நிமிடம் தட்டி தேற்ற நடுத்தரவாதிகளுக்கு தினமும் வேதைபடுகிறது தீபாவளி!!-
காதல் கவிவடிக்க முக்குக்கு மூண்று முக்க,
காயங்களை கவியாக்கி,
கவியை கலையாக்கி,
கலையை குரலாக்கி,
அந்த குறளுக்கே குரல் கொடுக்கும் இந்த
ஆறாம் அறிவை
அந்த ஐந்தறிவுக்கு எப்படி பிடிக்கும்!?!?!-
ஜோடி கொலுசுக்கு கோடி கவிதை வடிக்கும் கொஞ்சல் கவிஞனே,
அடிமை சங்கிலி அது அவிழ்த்தெறி
எனும் அறைவரி போதாதா!!
-
பாசம் சுமக்கும் தாய்க்கு,
பாரம் ஒன்றும் சுமையல்ல!
பொத்தி வளர்ந்த பிள்ளைக்கு,
அம்மாவே சுமையாகி,
அம்மாவாசைக்கு அம்மாவை கூப்பிட கத்தி கத்தி கரைகிறது!.!
கடவுளும் இல்லை!
காகமும் இல்லை!!
அம்மாவுமில்லை!!!
மனிதமுமில்லை!!!-
உயிர்ப்புடன் இருக்கும் பெரியார் சிலை முன்,
கல்லாய் போனேன் என கடவுள் கைவிரித்து நிற்கிறது..-