கவலைகள் வரும்போதெல்லாம்
நாம் கடல் முன்
நிற்கையில்;
அலைகளை அனுப்பி
நம் கவலைகளை
கரைப்பதனால் என்னவோ
அதனை 'கடற்கரை'
என்று அழைக்கிறார்கள் !
- தோழர்.சாய் மணி 🖋️-
வா தோழா......💪🏽
சிறிதளவு உணவோடும்
பெரும் வலியோடும்
நெடுந்தூரம் நாட்டின்
நெடுஞ்சாலையில்
நடந்து செல்பவர்கள்
நாடோடி அல்ல;
வறுமையால்
உழைப்பை நம்பி
வாழ வந்த
தொழிலாளர்கள் !
- தோழர்.சாய் மணி🖋️-
புத்தகமும்
ஒரு வகை
போதை தான்
என்றாலும்,
அதன் வீரியமோ
வாசிப்பைப் பொருத்தே
அமையும் !
- தோழர். சாய் மணி 🖋️-
நினைத்த ஆசைகளை
எல்லாம்,
நிஜத்தில் நிறைவேற
நினைத்து,
ஆசைப்படுகிறேன் !
- தோழர். சாய் மணி 🖋️-
சாதியால் சக மனிதனையே
ஒடுக்கியவன்,
கடவுளைக் கைக்காட்டி
பிறரையும்
மிருகமாக்கினான்;
அதே மண்ணில்,
சமத்துவ சட்டத்தால்
கல்வி மூலம் எங்களை
இவர்
மனிதனாக்கினார் !
- தோழர். சாய் மணி 🖋️-
நெடுந்தூர பயணத்தில்
உனை நினைக்கையில்,
அதன் தூரம்
குறைகிறது
உன் நினைவுகளின்
நீளத்தால்!
- தோழர். சாய் மணி 🖋️-
உனது காதல்
பார்வை,
என் மீது
பல போர்கள்
தொடுக்கும்;
முடிவில்,
நம் விழிகள்
அமைதிக்கே வழிவகுக்கும்!
- தோழர்.சாய் மணி 🖋️-
எனது மனம் கூட
அவள் பிரிவை ஏற்க
மறுக்கிறது;
அவள் நினைவுகள் அதனுள் நிறைந்திருப்பதால்!
- தோழர். சாய் மணி 🖋️-
திருட்டைத் தடுக்க
கட்டியச் சுவர் அல்ல ;
இது தீண்டாமையை வளர்க்க
எழுப்பியச் சுவர் !
கற்காலம் கடந்து
நவீன மனிதன் வாழும்
இவ்வுலகில் ;
சாதியத்தால் கற்சுவர் எழுப்பி
கொலைசெய்கிறான்
காட்டுமிராண்டித் தமிழன் !
-தோழர். சாய் மணி 🖋-
இயந்திரமோ
இறைவனோ,
விண்ணில் மட்டுமே
இருக்கும் நாட்டில்;
மலக்குழியோ
ஆழ்துளை கிணறோ,
குழிக்குள் விழுந்தால்
விடியல் ஏது ?
- தோழர்.சாய் மணி 🖋-