நீங்கள் கூர்மையான வார்த்தைகளால்
குத்தப்பட்ட வார்த்தைகளிள் வலியை,
என் வெற்றி எனும் வடுக்களால்
சீவி சிங்காரிக்கிறேன்.
என் வடுக்கள் பேசும் நான் சுமக்கும் வலி
எனும் வெற்றியை...!-
என்ன வேடிக்கை...!
எனக்கு பின்னால் குழிபறிப்பது,
நான் முன்னே ஓடிக்கொண்டு இருக்கிறேன்.-
ஏன் பொய் சொல்ல வேண்டும்...?
கண்னதாசன் சொன்னதை விடவா..! நான் சொல்ல போகிறேன். கல்கி எழுதியதை விடவா நான் எழுத போகிறேன். அற்ப பதர்களே சில நேரம் பொய்கள் ஆசுவாசபடுத்தும் பெருங்கோபத்தை உண்டாக்கும், ஆனாலும் பொய் இல்லா விட்டால் இயக்குநர் இராம் சொல்வதை போல் இங்கு அதிசயம், அழகு எல்லாம் இல்லாமல் போயிருக்கும்.-
கையில் பணம் இருந்தால்
என் பசி நோன்பு ஆகும்
பணமில்லை என்றால்
என் விரதம் பசி ஆகும்
-
நிராகரித்து கொள்ளுங்கள்,
நிறமாக, சாதீயாக, பணமாக
மட்கிபோன மனித மாண்புகள்
வெட்கி தன்தலை குனியட்டும்
நீர்த்து போன மானுட அறம்
மண்னுக்குள் புதைந்து போக,
இந்த தீநுண்மி உரத்தில்
நீங்கள் முளைத்து வாருங்கள்.
நிராகரிப்பு புதியது அல்ல
நாளொன்றுக்கு வருவதால்
உதியமாகும் கதிரவன் போல
உன்னை சுழலாக்கும் நீராய்
உதித்து சுழன்று வருவேன்.
நாட்களை குறித்து கொள்
நான் நிமிரும் நன் -நாளை
-
அம்மாக்கள் கொடுத்த
ஒரு ரூபாய் நாணயத்தில்
வாங்கிய மிட்டாய்
அவ்வளவு ருசி...
இன்று கை நிறைய சம்பளம்
வாங்கினாலும் நாளும்
ஒருவேளையாது தொடர்கிறது பசி-
காதல் சொல்லவும்
சொல்லிய காதலை ஏற்கவும்
ஏற்ற காதலை நிராகரிக்கவும்
நிராகரித்த காதலை மறக்கவும்
இப்படி மாற்றங்கள் பல இருக்கும்
காதலில் காரணங்கள் மட்டும்
மாறுவதே இல்லை
இப்பொழுதும்..!
எப்பொழுதும்..!-
கடிதங்கள் காணமல் போனது
அதோடு எத்தணை காதல்களும்
வாட்ஸ் அப்பில் குவிந்து
கிடக்கும் குறுந்தகவலில்
எனக்கு வந்தது பல காதல்கள்
யாரோ யாருக்கோ அனுப்பிய
ஃபார்வர்டு மெஸேச்...!-
எனதருகில் அருகில் நீ இல்லை
ஆனாலும் என் கண்னீர் துடைக்க
நாலு ஆறுதல் வார்த்தை கூற
உன் தோளில் சாய்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்தாக வேண்டும்
இது சுய நலம் என்றால்
இருந்து போகட்டும் சுயநலம் போல்
நீ என் அருகில் இருந்து கொண்டிரு-
நல்லா இருக்குற டா
என்ற பொய்யில் தான்
உரையாடல் தொடந்தது,
ஆனால் உண்மையை
சொன்னால் நம்பாது
நம்பிக்கையற்ற உலகம்-