ஒருவரிடம் உனக்கான முன்னுரிமை முடங்கும்போது... 🤦
முன்னதாகவே அவரை விட்டு விலகி விடு..😷-
தவறுகளுக்கு
முன்னுரிமை
தருகிறது...
உந்தன் விழிகள்...
உந்தன் மெளனத்தை
தவிர தண்டனை
எதுவாயினும் சம்மதமே..-
முத்தங்கள் சிலவற்றை
பதிவு செய்திட ஆசையடி...!!!😍
அவை,
செவ்விதழ்களுக்கு அல்ல..!
குளிர்கன்னங்களுக்கு அல்ல...!!
நெற்றிப்பொட்டுக்கும் அல்ல...!!!
மிருதுவான
உன் செவிமடல்களுக்கே
அந்த முன்னுரிமை..!!!😘-
வலிக்கிறதென்ற என் குறுஞ்செய்திக்காய்
என்ன முடிவெடுப்பதென்ற குழப்பத்திற்காய்
உன் வாழ்வின் எதிர்காலம் பற்றிய முடிவறிய
ஆழ்மனதில் புதைந்த கேள்விகளின் பதிலறிய
இரகசியமும், வழிநடத்தலும், நட்பும் நேசமுமென
அனைத்துமாய் உனக்கு நானே
முன்னிருப்பதில் உள்ளம் பூரிக்கிறேன்..-
நம்மீது அன்புடைவர்களிடம் முன்னுரிமைக்கு விருப்பப்பட்டு, ஆழமான அன்பின் தன்மையை அர்த்தமற்றதாக்கி விடக்கூடாது..
ஆழமரியா அன்பு முக்கியத்துவமானது..
முக்கியத்துவம் வாய்ந்த அன்பிற்கு முன்னுரிமை தேவையில்லை..!!..-
இனியவளின்
கண்ணுக்குழியின்
அழகில் தூசிகளும்
காற்றின் உதவியுடன்
ஆழம் பார்த்து
கண் கலங்கக்
கண்ணீரை வரவைக்கிறது
ஏற்க்கனவே ! விழுந்தவன்
கண்ணைக் தொடுகையில்
வெளியே வருவதற்கு
தூசிகளெல்லாம்
பாதையைத் தேடி
ஓரமாய் !ஓரம்கட்டுகிறது
முதலில் விழுந்தவனுக்கு
முன்னுரிமை என்பதற்காக-