நான்கு கால்களில் நடைபோட்டு;
பயணத்தில் ஒன்றானோம்😇
மூன்று முடிச்சி தனை
கழுத்தில் போட்டு;
குடும்பத்தில் ஒன்றானோம்😍
இருவேறு இதயம் கலந்து;
காதலில் ஒன்றானோம்😉
இனி,
ஓர் உயிராய்
ஓர் உணர்வாய்
இல்வாழ்க்கையில்
ஒன்றாவோம்😘-
கண்ணகி எரித்த மதுரையில் பொறியியல் முடித்த... read more
கொஞ்சம் பொறு😍
கருவிழிகளின் திசையை மாற்றிவிடாதே..!!
சில கவிதைகளை திருடிக்கொள்கிறேன்..😘😘-
மார்கழி மாத குளிருக்கு
வெதுவெதுப்பான அரவணைப்பை
மிதமான இளஞ்சூட்டில்
இதமாக தந்து செல்கிறாயடி...😍❤️-
அப்பட்டமாய்
அடங்கித்தான் போகிறேன்😍
அதிகாலை குளிரில்......
அணைத்துக்கொள்ள நீ இருப்பதால் தான் என்னவோ..?😘-
என் மீது உரசிச் சென்ற உன் சேலையின் முந்தானையும்
சப்தமின்றி முத்தமிட்டு சென்றது 💕-
முதன்முதலாய் கொடியில் உலர்த்தப்பட்ட
என் சட்டையும்
உன் சேலையும்
ஒன்றோடு ஒன்று உரசி
குளிர்ந்து பேசிக்
கொண்டனவாம்..😘
உச்சி வெயில் என்பதை பாராமலும்...😍-
இன்றைய தேதிக்கு
30 அகவையுடனும்
சுமாரான படிப்பறிவிலும்
நான் இருக்கிறேன் என்றாலும்...
என் அப்பனின்
அறிவுக்கும்
புத்தி கூர்மைக்கும்
நான் சில படிகள் பின்னாலும் கீழேயும் தான் இருக்கிறேன்..!!
இது எனக்கு பெருமைதான்😍-
"யாரிடமும் சொல்லிவிடாதே"
என்று மேற்கோளிட்டு
நண்பணிடம் பகிர்ந்த ஓர் செய்தி
இரண்டே நாளைக்குள்
7 வெவ்வேறு நண்பர்களின் வாயிலாக
மீண்டும் எனை வந்தடைந்தது...
"யாரிடமும் சொல்லிவிடாதே"
என்ற அதே மேற்கோளுடன்...🤣
#Friendsatrocities #-
தொடக்கத்தைக் கூட
"ஒரு ஊர்ல..."
அப்டின்னு
ஆரம்பிச்சு தான்
பாட்டி கதை சொல்லுச்சி-