எனக்காக வந்தாயே...
எனக்காக செய்தாயே❤️👇...-
சில புராதன
சிவ தலங்களிலே
சிவனுக்கு
மிகவும் உசிதமான
நாகலிங்க மரம்
வளர்க்கப்படுகிறது!
அதில் ஒன்று
திருவானைக்காவல்
ஜம்புகேஸ்வரர்
கோயிலில்
வளர்ந்திருக்கிறது!-
மகேஷ்வரா...
மறக்கவும்
நினைந்திட்டேன்!
உனை
நினைக்கவும்
மறந்திட்டேன்!
மனமெனும்
மாயக்குரங்கு
மருளில் மாட்டித்
தவிக்கையிலே!
🔯சிவாய நமஹ 🔯-
வருவாய் என் ஈசா!
உருவாய் உயிர்நேசா!
வருவாய் துணையாய்!
இணைவாய் இதமாய்!!
அமுதை பொழிவாய்!
கருவாய் வளர்வாய் !
நெஞ்சை நிறைப்பாய்!!
தொழுவேன் உனையே..
துன்பம் களைவாய்!
🔯சிவாய நமஹ🔯-
எந்த குழுவில் மாட்டிக்கொண்ட
சிறுப்பிள்ளையோ..! சோற்றிற்கும் சில்லறைக்கும்
அங்கணன் வேடமிட்டு திரிகிறதே..!
ஒருவேளை மெய்ய்யாக சிவனாக
கூடுமோ.. திருமறைகள் சொல்வது
போல் திருவிளையாடல் புரிய
தெரு வந்து கிடக்கிறானோ
இறைவா..! என்சிவனை காப்பாற்று..!-
உலகெ லாம் நிறைபவனே...
உமையவளின் பதி இவனே...
பிறை நிலவைச் சூடிய சுருள் முடியும்..
புலியாடை மெய்யுடலில் போர்த்தியவனும்...
சிரத்தில் கங்கையை கொண்டவனே
சாம்பலே இறுதியில் என்றுரைத்தவனே...
முக்கன் செல்வனே...
முழுமுதற் கடவுளே..
இவ்விழி பிறவி இறுதிக்குள்
நின் திருமுகத்தை காணுவதை யன்றி
வேறொன்றும் வேண்டா என் னிறைவா...!!!-
ஒருவர்க்கு
அன்போ வெறுப்போ
எது கிட்டினும்
அவன் செயலே!
அவனின்றி
அணுவும் அசையாது
அவனியிலே !
செய்வினையும் அவனே!
செயற்பாட்டு
வினையும் அவனே!
#ஓம்நமச்சிவாய
✨ரா நி✨
-