கரங்களை நீட்டினால்
கன்னத்தில் தருகிறாய்
கன்னத்தை காட்டினால்
இதழ்களை சுவைக்கிறாய்
இதைவிட பெரிய ஏ'மாற்றம்'
இருக்கிறதா என்ன🤔🤔-
14 OCT 2019 AT 16:47
14 OCT 2019 AT 16:41
சில மாற்றங்களின்
அடித்தளமாக...
சில எதிர்பார்ப்புகளின்
எதிர்வினையாக...
சில ஆசைகளின்
வெகுமதியாக...
சில நட்புகளின்
பெரும் பரிசாக...-
14 OCT 2019 AT 17:29
நாம் எதிர்பார்த்த இடத்தில் ஏதோ ஒரு மாற்றம், நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக இருக்கையில் ஏற்க மறுக்கும் மனத்தின் வலியே ஏமாற்றம் 😥..
-
14 OCT 2019 AT 16:35
14 OCT 2019 AT 16:57
ஏமாற்றம் என்பது
மனஞ்சுரந்த பின்னல் வலையில்
சொல்வாளின் கீறலோ?
விரல் தொட்டுத் தைத்த
வரிகளின் கிழிசலா?
உரலோடு மோதிய உலக்கையிடை
தெறித்த நெல்மணிகளா?
பல் பதித்த தேகத்தில்
வலி படர்ந்த பார்வையா?-
14 OCT 2019 AT 16:41
எதிர்பார்ப்பில் தானே
ஏமாற்றம் வரும்!
ஏமாறினால் தானே
மாற்றம் வரும்!
மாறினால் தானே
வாழ்க்கை வசந்தமாகும்!-
14 OCT 2019 AT 18:08
நம் எதிர்பார்ப்பிற்கும்
நம்பிக்கைக்கும்
உரியவரின்
மனமாற்றம்.-
14 OCT 2019 AT 16:56
அழகை பார்த்து
அன்பு வைத்தால்
ஏமாந்தே போவாய்!
அகத்தைப் பார்த்து
அன்பு வைத்தால்
ஏமாறத் தேவையில்லை!-