QUOTES ON #இதழ்கள்

#இதழ்கள் quotes

Trending | Latest
12 OCT 2019 AT 20:57

இருள் போர்த்திய
இரவினில்
இப்படியே
இருந்துவிடவா....
இதழ் சிவந்த  
இடைவெளியில்லா
இறுக்கத்துடன்!

-


22 AUG 2019 AT 9:27

முடியாமல் போன
விடியலின் முடிவிலே
நிழல்பூக்களின்
மறுமொழியாக்கத்தில்
பட்டுத்தெறித்தது
இதழ்களின் அழகு
மின்மினியாகி!

-


27 SEP 2020 AT 20:50

உன் இமைகளை அவிழ்க்காதே
அத் தேன் வண்டும் மமதை கொள்ளும்
அப் பூந்தென்றல் வருடும் முன்னே
நம் இதழ்களால் குவித்துக் கொள்வோம்!

-


20 JUL 2020 AT 19:10

புன்னகையால் வரைந்த
கவிதை ஒன்று
அவிழ்ந்து சொல்லுதே
என்னிடம்
நானும் மலர் தான் என்று!

'உன் இதழ்கள்'

-


27 MAY 2020 AT 9:29

முற்றுப்
பெறாமல்
முத்தங்கள்
ஈரம் படிந்த
கவிதைகளாக!

-


15 OCT 2020 AT 19:47

அவ்வப்போது
எழுதிக் கொள்கிறேன்
உன் இதழ்களில்
என் கவிதைகளை!

-


8 MAY 2020 AT 16:38

என் வரிகளில்
நுழைந்து கொள்
கவிகளால்
வருடுகிறேன்
இதழ்களில்!

-


27 MAY 2020 AT 9:24

முற்றுப் பெறாத
கவிதைகளும்
இதழ்கள் நனைய
காத்திருக்கின்றன,
முழுமையடையாத
நம் முத்தங்கள்
போலவே....!

-


12 NOV 2019 AT 20:29

இதழ்களின்
இணைசேரலில்
நம்
சுவாசக்காற்றைக்
கொஞ்சம்
கடன்வாங்கி
மூச்சுவிட்டுக்
கொள்கிறது
காதல் !!

-



பிரம்மன்
மிச்சமின்றி
படைத்த
சிலையின்
உச்ச கட்ட
பேரழகு
உன் இதழோர
மச்சம்
பேரதிசயமாய்
உயர்ந்து நிற்கிறது !

-