கவிஞன் மறைந்தாலும்
அவன் கவிகள் மறைவதில்லை.-
வேற்றுமை கழட்டி;
ஒற்றுமை பூட்டி!
சீற்றங்கள் தவிர்த்து;
எல்லைகள் தகர்த்து!
அறத்தை விளக்கி;
சிந்தனை பெருக்கி!
பகைமை சிதைத்து;
மனிதத்தை வளர்த்து!
வாழ்த்துக்களுடன்!
-தேவசேனா கணேஷ்
-
"நாம் அம்மாவை இப்போது எப்படி பார்த்துக் கொள்கிறோம் என்பதை விட,
கடைசி காலத்தில் எப்படி பார்த்துக் கொள்கிறோம் என்பதில் தான் உண்மையான பாசம் இருக்கிறது"!..-
உம் மீசையின் கூர்மையை விட
உம் கவிதை கூர்மையானது....
நேர்கொண்ட பார்வை
கம்பீரமான நடை
உம் செயலின் வீரத்தை உணர்த்தும்....
உம் எழுத்துகள் மூலமாகவே
தமிழனின் உணர்ச்சியை தூண்டினாய்...
அக்காலமே பெண்ணின் பெருமையை
உணர்ந்த கவி நீ.....
தமிழை தம் கவிதைகளின் மூலமாக
மக்கள் மனதில் நிலைநாட்டினாய்....
உம் கவியை கேட்காத காதில்லை என்பதை விட
உம் கவிதையை கேட்காதது காதேயில்லை என்பது தான்
உண்மை....-
சிலர் நம்மோடு குறைந்த காலம் பழகினாலும் வாழ்க்கை முழுவதும் நிறைந்து விடுகின்றனர்!...
-
அடர்ந்த பனிமேகம்..!
அங்கே அழகாய் சிறுவீடு..!
வீட்டின் கூரையில் பனிப்போர்வை..!
பச்சைப்புல்வெளி சூழ்ந்த இடத்தில்
வெள்ளை முத்துக்கள் உருண்டோடுகின்றது..!
@_ரமேஷ்யோகி..✍️-