அவனருளாலே,அவன்தாள் பணிந்து,
அடியேன் மூலம் எழுதப்பெற்ற அகமதிலாடும் அம்பலவாணண்;
ஓம் நமசிவாய!
தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!-
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே..
-திருமந்திரம்
கட்சி கொடிகளுக்கு முன்
எம்
காவி கொடி தலை வணங்காது!
வெள்ளை சட்டைகார்களை விட
எம் வேர்வை சிந்தும்
விவசாயிக்கு தான்
எம்
வெள்ளை கொடி தலை வணங்கும்!
பட்டொளி வீசும்
பச்சை கொடிக்கு எந்தக்கொடியின்
பாட்க்ஷாவும் பழிக்காது!
சுதர்சன சக்கரமும் தலைவணங்கும்
எம் அசோக சக்கரம் முன்!
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
-
முதுகு வலி பொறுத்து
மூட்டை சுமந்து
என்னை முன்னேற்றமாக்கினாய்
நீ மூதாட்டி ஆகும் வரை..
இடர்பாடுகளின் இடையே
இம்பரின் அழகான
இனிமையை தொலைத்தாய்..
ஒத்தையடிபாதையிலே
கட்டுக்கட்டாய் கொண்டு போகையிலே
ஒவ்வொருவர் பார்வையிலும்
ஓராயிரம் அர்த்தம்..
இவர்களுக்கு மத்தியில்
இனிமையான உன் எதார்த்தம்..
சொத்து சுகம் இழந்த போதும்
கட்டின புருஷன் இறந்த போதும்
நீ அழவில்லை
உன் பத்து மாத வயித்துப்பிள்ளை
பசியால் அழுகையிலே
உன் மார் பிடித்து பால் கொடுத்தாய்..
அப்பொழுது
கண்துடைப்பார் யாருமில்லை..
கண்விழிப்பார் எவருமில்லை..
இப்பொழுது
?
-