சோர்ந்து போன என்னை
சாம்பலாய் மாற்றிட துடிக்கின்ற கவலைகள்...
காயம் பட்ட என்னை கண்ணீராய்
கொட்டிட துடிக்கின்ற கண்கள்...
கவலைகளை எல்லாம் உதறிட துடிக்கின்ற மனம்...
மனதினை தேற்றிட வெட்டவெளிதனில் பயணிக்கின்ற கால்கள்....
கரையேறிடவே துடிக்கின்ற உள்ளம்...
@_ரமேஷ்யோகி..✍️
-
தமிழோடு வாழு...
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே...👍
Insta I'd : ra... read more
வெண்ணிற பாலாடையில் தவலுகின்ற கன்னி வெடிகளோ.!! - இவளின் கண்கள்!
வெட்கத்தில் துள்ளி குதிக்கின்ற கொலுசு மணிகள்!
முகத்தில் படர்ந்த செங்கதிர்கள்
செவ்வானமும் வெட்கம் கொள்கின்றது...
@_ரமேஷ்யோகி..✍️
-
கருஞ் சாயம் பூசிய வானம்!
செந்நிறத்தில் சூழ்ந்த மேகம்!
வெள்ளை தீட்டிய நட்சத்திரம்!
தேய்ந்த நிலவின் பின்புலம்!
இரவினை இனிமையாக்க காத்துக்கிடக்கின்றன...
@_ரமேஷ்யோகி..✍️-
குடுத்த தண்ணீரும் போதவில்லை!
குடுக்க நினைத்த தண்ணீரும் காணவில்லை!
மீதமிருந்த தண்ணீரோ எந்தன் தொண்டையை நனைத்தது!
மீண்டு செல்ல முயன்றும் முடியாமல் தவித்தேன்!
அறிமுகப்படுத்திய அரைநொடியில் அவளின் தமிழ் ஆர்வம் அறிந்தேன்!
அளவறியா ஆனந்தம் கொண்டே சென்றேன்!
@_ரமேஷ்யோகி..✍️
-
புத்தகத்தினுள்ளே நுழைந்திடு..!
புழுவாய் ஊறிடு...!
புதியதாய் சிந்தனை செய்திடு..!
புதுமையான சமூகத்தை அமைத்திடு..!
புன்னகை புரிந்திடு...!
புரிந்தததை புரிய வைத்திடு..!
புரியாததை புதிராக்கிடு..!
@_ரமேஷ்யோகி..✍️-
விழுகின்ற அருவியும் அழுவதில்லை
விழுகின்ற நீ மட்டும் ஏன் அழுகின்றாய்.?
விழுந்தாலும் எழுந்திட பழகிடு...
வீழ்ந்தாலும் மீண்டும் முட்டி மோதிடு...
இருளில் மூழ்கி கிடக்காதே...
இருளும் கடந்து போய்விடும் கவலையும் கொள்ளாதே...
கவலைகளை கடத்திடு...
கானல் நீராய் போகட்டும்...
@_ரமேஷ்யோகி..✍️
-
அழிந்துப் போன சுவடுகள்//
அழியாத நினைவுகள்//
வகுப்பறையினுள்ளே...
@_ரமேஷ்யோகி..✍️-
கண்ணீர் துளிகள் எல்லாம் கரைப்புரண்டு ஓடுகின்றது!
கருவிழிகளில் ஒவ்வொன்றும் குளமாய் தேங்கி நிற்கின்றது!
இரவினில் மட்டுமே என்னிடம் விளையாட்டு காட்டுகின்றது!
@_ரமேஷ்யோகி..✍️-
கால்நெடுக நடந்து
தண்ணீரை எண்ணியே கண்ணீரை
வடித்திட!
காலில் அணிந்த செருப்பும் தேய்ந்துப் போய்விட!
சொட்டு சொட்டாய் வடிந்த நீரை குடத்திலே நிரப்பிடவே துடித்திட!
கானல் நீராய் போனது நீரோடைகளும்!
காய்ந்து போனது காலி குடங்களும்!
வாடிய முகத்தினில்
வறண்டு போனது தொண்டை சுரப்பிகளும்!
@_ரமேஷ்யோகி..✍️
-
அவளின் கதறுதல் யாவும் அவன் செவியில் ஒலிக்கவில்லை.!!
அவனின் செயலை கண்டு குருவிகளும் கூச்சலிடுகின்றது.!!
தொண்டையை நெருக்கிய கைகளும் குரல்வளையை நசுக்கின்றது.!!
கதறும் ஒலி குறைந்து கண்ணீரோ சிவப்பு வண்ணத்திலே ஆறாய் ஓடுகின்றது.!!
ஓங்கிய கைகளை ஒடுக்குகின்றான்.!!
மனித உருவினில் மிருகமாய் மாறுகின்றான்.!!
கயவனாய் காம பசியினை தீர்த்து கானா பிணமாய் ஆக்குகின்றான்.!!
@_ரமேஷ்யோகி..✍️-