QUOTES ON #மாயா

#மாயா quotes

Trending | Latest
12 NOV 2019 AT 10:11

கள்ளச் சிரிப்பழகி
கன்னக்குழி அழகி
காந்தப் பார்வையாலே
கவர்ந்திடுவாய் என்னிதயம் .
அலையலையாய் உன் சிரிப்பு
ஆழ்மனமும் வருடும்படி .
அணைத்து உன்னை
அள்ளி அணைக்க
அத்தை மனம் ஏங்குதம்மா
எங்கள் வீட்டு மருமகளே
மாயா குட்டி. 😍😍😍😍

-


27 FEB 2024 AT 21:31

தழைய தழைய
சேலை உடுத்தி
செந்தாமரை
போல் புன்னகை
சிந்த பிறை நெற்றியில்
செந்தூரமிட்டு
தேவதை அவள்
நடந்துவர
சட்டென்று மாறிப்போகும்
என் உலகம்

-


2 MAY 2024 AT 18:33

உங்களை போல்
நடிக்க வேண்டும்
என்றால் நான்
இன்னுமொரு
பிறவி எடுக்க
வேண்டும் 😁😁

-


21 FEB 2024 AT 17:01

ஒரு நாளைக்கு
எத்தனை முறை
எனை நினைக்கும்
உன் இதயம்
கோடிட்டு பத்திரப்படுத்து
காதலின் நீளம் நீளட்டும்
மாயா

-


30 JUL 2024 AT 20:58

காதல் செய்ய
விதவிதமான
காரணங்கள்
கவிதை சொல்ல
வந்தால்
கண்ணடித்து
சிறையில்
அடைகிறாள்

-


29 FEB 2024 AT 18:47

அவளுடைய பிறந்த நாள் தொடங்கி
வாழ்த்துக்கள் அனைத்திற்கும்
காரணம் தேடுவேன் அவளுக்கு
மகளிர் தின வாழ்த்து💐
அன்னையர் தின வாழ்த்து💐
சகோதரர் தின வாழ்த்து💐
நண்பர்கள் தின வாழ்த்து💐
குழந்தைகள் தின வாழ்த்து💐
பிறந்த நாள் வாழ்த்து💐
புதிய வருடம் வாழ்த்து💐
தேவதைகள் தின வாழ்த்து💐
பெண் குழந்தைகள் தின வாழ்த்து 💐
இன்னும் எண்ணற்ற வாழ்த்துக்கள் 💐
எதையோ மறக்க ஏதேதோ
சொல்ல வேண்டும் அவள்
கோபங்களுக்குள் நான் வாழ வேண்டும்
அவளுக்கு பிடிக்காத நான்

-


27 FEB 2024 AT 20:22

நிரந்தர
பிரிவு
எதுவும்
சாத்தியமில்லை
இந்த பிரிவு கூட
நிரந்தரமில்லை

-


2 MAY 2024 AT 18:46


அப்போது நீங்கள்
இன்னும் தேர்ந்திருப்பீர்கள்

அடுத்தடுத்து
பிறவிகள் எடுப்பினும்
உங்கள் அளவுக்கு நடிப்பது
இயலாத காரியம்தான்

-


17 APR 2024 AT 22:23

உன் கர்வமான
முக பாவனையில்
நிபந்தனைகள்
ஏதுமின்றி
விழுந்துவிட்டேன்
வில் புருவம்
விலைபேசும் விழிகள்
சொல் நாண்
சொக்க வைக்கும்
உன் அழகு

-


1 JUN 2024 AT 19:07

காதல் என்றால்
முத்தம்
காதல் என்றால்
அனைப்பு
காதல் என்றால்
கவிதை
காதல் என்றால்
காமம்
காதல் என்றால்
மோகம்
காதல் என்றால்
ராகம்
காதல் என்றால்
இசை
காதல் என்றால்
லயிப்பு
காதல் என்றால்
காத்திருப்பு
காதல் என்றால்
இதழ் வாசிப்பு
காதல் என்றால்
கரம் பற்றி
விழி நோக்குதல்
என் காதல்
இவ்வளவு தான்

-