நீ எப்போது வருவாய் என
உரக்கக் கேட்டுக் கேட்டு
நச்சரித்துக் கொண்டே
காத்திருந்தது மனசு
உன் வருகையின் போது
பேரரவமாய் எழுந்து நீண்டது
அதன் பேரிரைச்சல்
ஆமாம்!?
என்னைப் பிடித்த நீ_
எனக்குப் பிடித்தவளா?
என் சிந்தைக்குப் பிடித்தவளா??
என் மனதுக்குப் பிடித்தவளா??
மனதுக்குத்தான் போலிருக்கிறது!
அதுதானே
என்னை நச்சரித்து
உன்னை உச்சரித்து
பேரரவமாய் வரவேற்று
பேரிரைச்சலுடன் உபசரித்தது!?
நானோ
என் சிந்தையோ
அல்லதானே?-
எனது Profile வந்தமைக்கு முதற்கண்
வணக்கங்கள்.
i Am Rangz
R. ரங... read more
உறுமீனுக்காய்
அசையாது ஆசையாய்க்
காத்திருந்த கொக்குக்கு
எமனாகிப் போனான்
வேட்டைக்காரன்
அவனுக்குக் குறி வைக்கத்
தோதாக அமைந்தது
அசையாக் கொக்கின்
நீள் காத்திருப்பு
பசியாறக் காத்திருந்தது
உணவாகிப் போனது
-
நேருக்கு நேர்தான்
விளக்கம் சொல்லியிருந்தேன்.
விளக்கத்தை, கமெண்ட்ஐ டெலிட் செய்து விட்டு unfollow, block எனில் (மறுபடி) நேருக்கு நேர்
எப்படி முடியும்??
-
பாவம் .... அவளுக்குத்தான்
பார்வைத்திறன் செவித்திறன்
இல்லையே....
எங்ஙனம் கேட்பாள்? பாவம்
எங்ஙனம் புரிந்து கொள்வாள்??-
மெத்தைகள் தேவையில்லை
தாயின் உருவம் வரைந்த
கட்டாந்தரை போதும்
சிறுமியின் ஏக்கம் விளக்க
வார்த்தைகள் ஏதும்
தேவையேயில்லை-
கவி நள் 🙏👍
நன்று. ஆபாச வார்த்தைகள் ஏதும் இருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. *த்தம் என்ற வார்த்தை கூட இல்லை.
இலைமறை காய்மறைவாகத்தான்
உவமை/உருவகப்படுத்தியிருக்கின்றேன்.
குறிஞ்சி என்றால் எந்தத் திணை என்பதை அறிந்தவருக்குத்தான்
அடுத்த வார்த்தைகளின் அர்த்தம் புலப்படும்.
அவ்வளவு தமிழ் அறிந்தவர்கள் இதைத் திருக்குறளின்
மூன்றாம் பாலில் அட்டவணைப்படுத்திக்கொள்வார்கள்.
எனினும்_ குறிப்பிட்டமைக்கு நன்றி.
இனிவருங்காலங்களில் கவிநள்-லில் எழுதினால்,
எழுதும் போது வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறேன் 🙏-
காலையை ரசிக்க
எங்கே விடுகின்றன
கடமைகள்?
கடிவாளக் கண்மூடி போட்டுக் கொண்டு
கழுதை போல முதுகில்
குடும்ப பாரம் ஏற்றிக் கொண்டு
தேய்ந்து போன லாடத்துடன்
மெல்ல நடக்க விடாமல்
விலா-வில் தூண்டப்பட்டு
Trot-டிக் கொண்டிருக்கையில் ??-
ஆக
இருக்கவே முடிவதில்லை
அப்போதுதான் மனம்
ஆயிரம் விஷயங்களை
இழுத்துப் போட்டுக்கொண்டு
அலசி ஆராய்ந்து சிந்தித்து
மேலும் குழம்பி போகின்றது
குழம்பித் தெளிவதற்கு
நெடுநேரம் பிடிக்கின்றது
அதற்குள் லௌஹீஹ வாழ்க்கைக்குத்
திரும்ப வேண்டி இருக்கின்றது
-