பின்னங்கழுத்தில்
பின்னி பிணைந்து
பாதகன் அவனிட்ட
பாலிகை முத்தங்கள்
பக்குவமாய் பதம்பார்க்க
பாவை நெஞ்சில் நஞ்சன
பாலின்ப விருப்பினை
மூட்டி வாட்டும்
பின்னங்கழுத்து ப்ரியன்..!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
நினைக்க நினைக்க
காதல் கூடுதே...
மறக்க நினைக்க
வலிகள் சேருதே...
துயர் என்னை உடைத்தாலும்
உயர் ஒன்று அடைந்தாலும்
ஊனும் உயிரும்
உனக்காக வாழுமே...
நேர்வரும் நொடியெல்லாம்
உன் கைகோத்திருக்க வேண்டும்...
மனமுடைந்து மாயும்போதெல்லாம்
உன் மடி விழ வேண்டும்...
மெதுவாக தலைகோதி
என் பிணி போக்கிட வேண்டும்...
நீ என்னைவிட்டு விலகிட நினைத்தால்
போ என்றுதான் சொல்வேன்...
என்னைவிட்டுப் போகாதே என்று
உள்ளுக்குள் தனியாய் அழுவேன்...
- ப்ரியன்❤️
-
பேரழகு என்ற வார்த்தையின்
அர்த்தம் நீ என்றேன், அவளிடம்.
மரங்கள் தலை அசைத்து
வழிமொழிந்தன.
வானம் மழை பொழிந்து,
வரவேற்றது.
அவள் கண் அசைத்து
என்னை கட்டியணைத்தாள்...!!!
-
நினைக்க
மறந்தாலும்
அவள் முகம்...
மறக்க
நினைத்தாலும்
அவள் முகம்...
என்றும்
என் நினைவில்!
- ப்ரியன்❤️-
ஒரு வார்த்தையில்
ஹைக்கூ
கேட்டார்கள்,
அவளது பெயரைச்
சொன்னேன்..!!!
-
இமைப்போல்🙂
சேரும் நொடியில்
கனவாகவும்😍!!
உதட்டினைப்போல்
சேரும் நொடிதனில்
முத்தக்💋கவிதையாகவும்
தொடர்வோமடா😘!!!-
நிலவின் வருகையை
எதிர்நோக்கும் அல்லி மொட்டுகளாய்💞
உன் வரவை எதிர்நோக்கி
கடந்த மணித்துளிகள்💜
- நந்தவனத்தில்💐❣️-
பூக்களுக்கருகில்
சென்றுவிடாதே என்
அன்பே...
அவைகளுக்கும்,
ஒரு வேளை
இதயம் இருந்தால்...!!!
-
மாலை நேரம்
எனக்கும் கொஞ்சம் பயம் தான்.
அவளை வெளியே அழைத்து செல்ல.
ஒரு வேளை வானம், தன் விண்மீனை
கீழே தவறவிட்டுவிட்டோம்
என்றெண்ணி, அவளை
எடுத்துக்கொண்டால்...!?
-
இரவு இன்னும்
கருத்துப்போனது.
காலையில்
உனது கண்ணுக்கு
மையாக்கிக் கொள்வாய்
என்ற நம்பிக்கையில்...
-