தேடப்படுதலே
தேடப்படுமிடத்தில் இருத்தலே😍
அன்பு மனம் ஏகும் தளை💞
ப்ரியங்களின் மொழி💙-
செல்ல இம்சை😉
தமிழ் பொண்ணு❣️
insta--vishalipriyakrish
தாமதிக்காது வந்து
தழுவிக்💞 கொள்ளும்
அலைகளுக்கெல்லாம்
உன் சாயலே💜 நேசகா!! 💞-
😍சேமித்து வைத்துள்ள
நேசங்களைப்💙பற்றி
உனக்கென்ன தெரியும்!!
கோடைமழையினைப்
போல் நீ ரசிக்க
காத்திருக்கும்
உனக்கே உனக்கான
நேசங்கள்💜அவை!!!!!
ப்ரியனே💞-
நான் இருக்கிறேன்! 💜
என்று நீ உரைத்த
அவ்வார்த்தைகள்😍
என் உயிரில் மீட்டிச் சென்றதடா
உன் ப்ரியங்களின்
கனத்தை💞-
நிரூபித்துக் கொண்டே
இருக்கும் வாழ்வொன்றில்
"விளக்கம்" வேண்டாத
உயிர்கள் மட்டுமே
வேர்களாக மாறித் தாங்கும் ❤️-
இசை ப்ரியம் என்றேன்🎶
குரல் அஞ்சல் அனுப்பி
இம்சை செய்கிறாள்😉
என் ப்ரிய பாடல்களை!!
அவளின்றி என் பிடித்தங்கள்😘
இருக்கக் கூடாது எனும்
பேராசைக்காரி😍💜
-
என் இமைக்குடை
நாணத்தால்☺️
கவிழ்ந்து கொள்ளும்
அழகினை உன்
கள்ளப் பார்வையால்😍
பருகிக்கொள்ளும்
இம்சையடா நீ! 💜-
இறகின் மென்மையினால்
ஆட்கொள்ளும்
நேசங்களே💜
தீயின் சுடர்களாய்
சுட்டெரிக்கும்❣️
-
என் நேசத் தேடலின்
வடிகால்💞
ப்ரியத்தாகத்திற்கான
நீர்ஊற்று💜
என் கனவு உலகின்
திறவுகோல்😘-