தொலைவில்
இருந்தாலும் ...
நான் தொலையும்
போதெல்லாம்...
எனை மீட்டெடுக்கும்
வல்லமை ...
உன் நட்பிற்கு மட்டுமே
அன்பு தோழி...!-
டிசம்பர் 31....💓💞💖💕♥️
நட்பு: புது வருட சிறப்பு என்ன பட்டுக்குட்டி...???🤔
நான்: நீ எனக்கு இந்த வருசத்துல கெடச்சதே
எனக்கு ரொம்ப ரொம்ப சிறப்பு அம்முக்குட்டி..!!!💕💞
நட்பு: அடியே.. என் மனச தொட்டுட்ட...!!!💖
நான்: நீ எப்பவோ என் மனசுக்குள்ள வந்து என் மனச தொட்டுட்ட💞நான்தான் ரொம்ப தாமதமா இப்போதான் வந்துருக்கேன்..
கவலையா இருக்கு அம்மு..!!!😣
நட்பு: நான் உன்னோட கவிதை படிக்கையிலயே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட💞நான்தான் ரொம்ப தாமதமா வந்துருக்கேன் லூசு..!!!😣
நான்: எனக்கு வெட்கமா வருகிறது..
நான் போய் வெட்க பட்டுட்டு வரட்டுமா...??🙈
நட்பு: ஹாஹா😆போ செல்லமே😘
நான்: போகவா.. போய்ரவா.. போய்ரட்டா...😣
நட்பு: நீதானா லூசுக்குட்டி வெட்கமா வருதுன்னு சொன்ன..
சரி போகாத வா.. வந்துரு என்கிட்ட..!!💖
"எனது வரிகளை விரும்பி படித்து அதில்
கிடைத்த உறவு.. என்றும் கலங்காது...!!!"
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
காதலையும் முத்தத்தையும்
இடைவிடாது அழகிய வரிகளில்
வடிக்கும் அன்புத் தோழி...
காதலும் கூட முத்தமிடக் கூடும்
இவரது முத்தக் கவிதைகளை...
மென்மையான உணர்வுகளை
வருடும் வார்த்தைகள் கொண்டு நிரப்பிய இவரது கவிதைகளுக்கு சுகமாய் வீசும் முல்லையின் வாசம்...
உங்களது கவிப்பயணம் மேலும்
சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள் தோழி...💐💐💐-
தோழமை என்ற உணர்வை
யார் கொடுத்தாலும் ...
அவர்களுக்கு நீ கொடுத்து
விடுகிறாய் உன் சாயலை...!-
சேர்ந்தாற் போல் இரண்டு
நாட்கள் அழைக்காவிடில்...
"உயிரோட தான்
இருக்கியா பக்கி" என
அவளிடமிருந்து வரும்
குறுஞ்செய்தியில்...
உயிர் வாழ்கிறது நான்
உயிர் வாழும் வரையில்
விட்டுத்தொலையாது
இந்த அன்புத்தொல்லை
என்ற மறைமுக செய்தி...!-
இரவெல்லாம் பகலாய்
மாறும்...
உறக்கமென்பது தொலைந்தே
போகும்...
அருகில் இருப்பவரின் பொறுமை
இங்கே கரையும்...
எங்கோ தொலைவில் இருந்து
அவள் அழைக்கும்
ஒற்றை கைப்பேசி அழைப்பினில்...!-
வீட்டின் பின்புறம்
அந்த பெரிய
வேப்பமரத்தின்
தாழ்ந்த கிளையில்
கட்டிய ஊஞ்சலில்
இருவரும் சேர்ந்து
ஆடி கீழே விழுந்த
காயம் அப்போது
வலிக்கவில்லை தோழி...
அந்த தழும்பை பார்க்க
இப்போது வலிக்கிறது
நீ எங்கே இருக்கிறாய்
என்று கூட எனக்கு
தெரியவில்லை என்று
எண்ணும் போது...!-
உன் விதிப்பயனோ
என் வினைப்பயனோ
விடுவாதாயில்லை நீயும் நானும்!
உன் தலையிலொரு பாரமாய்!
தவிர்க்க முடியாத தலைவியாய்!
ஆறுதல் சொல்லி
உனை மேலும் தூண்டவோ
அடுத்த அரிதாரம் நீ பூச!
ஜாடைகள் பேசி உன் சிந்தனையில்
ஒரு சீர்திருத்தம் செய்யவோ?!
என்மேல் நீ கோபம் கொள்ள!
தோழி என்பதால்
கர்மா களையவே விளைகிறேன்!
முடிந்தவரை முயல்கிறேன்!
முடியாததால் முடிக்கிறேன்! இங்கு!
✨Nithu✨
-
கானல் நீராய் இருந்த என்னை ஓடும் நதியாய் மாற்றியவள் அவள்.....
பாலைவனமாய் இருந்த என்னை மலரும் சோலையாக மாற்றியவள் அவள்....
அவள்....என்னுயிர்த் தோழி...
-
ஒன்றாய் நாளும்...
ஓயா அரட்டையும்...
உயிர்கொண்ட நிழலாய்
உடனிருந்த நீயும்.!
வாய்க்குமோ இனியும்
வரமாய் வாழ்வில்?!
📝ஜீவி தமிழ்😍...-