QUOTES ON #தினம்ஒருகுறள்

#தினம்ஒருகுறள் quotes

Trending | Latest
14 JUN 2023 AT 10:38

புரியாத இடத்தில்

தன்னிலை

விளக்கம்

கொடுப்பது கூட

ஒரு வகையில்

தண்டனை தான்

சிலருக்கு........

-


4 JAN 2021 AT 7:58

எழுத்துகளில் முதன்மையாக அகரம் அமைந்திருப்பது போல் உலகத்திற்கு முதன்மையாக கடவுள்!

-


15 DEC 2021 AT 23:16

நிறையுடைமை என்னும் நிலையில் இருந்து வீழாமல் இருக்கவேண்டுமானால், பொறுமை குணத்தை பின்பற்றுதல் வேண்டும்!

-


18 AUG 2021 AT 7:57

தீமை விழைக்க நினைப்பவர்களை என்றும் பொறுத்தருள்தல் நன்று, அதினும் அத்தீமையை மறத்தல் சிறப்பு.

-


13 APR 2021 AT 15:22

அன்பில்லார், அனைத்து பொருட்செல்வமும் தமது என்று வாழ்வர். அன்புடையார், தமக்கே உரிய பொருளையும் பிறர்க்கு உரியதாக பகிர்ந்து வாழ்வர்.

-


23 JAN 2021 AT 8:03

நீரின்றி உலகமே இல்லை என்றிருப்பதால், வானில் இருந்து நீர் பொழியாமல் போனால், உலக உயிர்களுக்கு ஒழுக்கம் தவறி விடும்.

-


12 JAN 2021 AT 8:43

எண்ணற்ற நற்குணங்களை கொண்ட இறைவனை பின்பற்றாதோர் மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய ஐம்பொறிகளை கொண்டாலும் பயனற்றதே!

-


8 JAN 2021 AT 8:05

இறைவனின் மெய்யான புகழை உணர்ந்து போற்றி வழிப்படுபவற்கு அறியாமையால் விளையும் இருவினைகளும் (நல்வினை, தீவினை) சேராது.

-


7 JAN 2021 AT 8:05

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் திருவடியை மனதில் பொருத்தி வாழ்பவற்கு, வாழ்வில் ஏதும் துன்பம் இல்லை.

-


29 AUG 2021 AT 7:20

திருவள்ளுவரின் திருக்குறள்

பால்: பொருட்பால்.
அதிகாரம்: சிற்றினஞ்சேராமை
குறள் 452:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
விளக்கம்:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

-